இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் அநேக விஷயங்களைப் பின்தொடர்கிறோம், ஆனால் ஒரே ஒரு அழைப்பு நமக்கு ஞானத்தைத் தருகிறது. அவரைத் தேடவும், அவரைக் கண்டுபிடிக்கவும் தேவன் நம்மை உண்டாக்கினார் என்று பவுல் ஏதெனியர்களுக்கு நினைப்பூட்டினார் (அப்போஸ்தலர் 17). நீதிமொழிகளின் ஞானம் நம்மை மீண்டும் "தேவனை அறிவதற்கு" வழிநடத்தி செல்லுகிறது மற்றும் ஞானத்தின் ஆதாரமாக அவர் மீது ஆழ்ந்த மற்றும் பயபக்திக்குறிய பிரமிப்பைக் கொண்டுள்ளது. நம்முடைய முன்னுரிமைகள், தேவைகள், நோக்கங்கள், குறிக்கோள்கள், பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது என்பது , முதலில் தேவன் யார் என்பதை உணர்ந்து, நம் அனுதின வாழ்க்கையில் அவரை அறிந்தால் மட்டுமே ஆகும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள , மகா வல்லமையுள்ள , நீதியுள்ள, நித்திய தேவனே . நீர் அடியேனை அறிந்ததை விட நான் உம்மை மிகவும் குறைவாகவே அறிவேன் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் வாழ்வில் உமது உண்மைத்தன்மை, வரலாற்றில் வெளிப்பட்ட உம்முடைய மகா வல்லமை, கிறிஸ்துவின் சிலுவையின் மூலம் பலரோடு பகிர்ந்து கொண்ட உம் கிருபை, ஒரு நாள் அடியேனை உம்மன்டை கொண்டு சேர்ப்பேன் என்ற உமது வாக்குத்தத்தம் இவையாவும் என்னை நிலைநிறுத்த உதவுகின்றன. நான் உம்மை மென்மேலும் அறிய விரும்புகிறேன், அதனால் என் வாழ்க்கை உமது சித்தத்தில் இணைந்து மறைந்திருக்க வேண்டும் - என் பெருமைக்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ அல்ல, ஆனால் உம்முடைய மகிமைக்காக , இன்று நான் கையிட்டு செய்யும் எல்லா காரியங்களிலும் உம்மை எனக்குத் விளங்கச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் இவைகளை கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து