இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யோவான் நமக்கு இரண்டு சத்தியங்களை முன்வைக்கிறார் - ஒன்று கடினமானது மற்றும் மற்றொன்று இலகுவானது: 1.பாவத்தில் சிக்கித் தவிக்கும் வாழ்க்கையைத் தொடரும் நபர், தங்கள் வாழ்க்கையில் பிசாசின் தாக்கத்தால் உண்டாக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டிருக்கிறார். 2.தேவனுடைய குமாரன், பிசாசின் காரியங்கள் யாவற்றையும் தகர்த்துவிட்டு , தேவனுடைய நோக்கங்களுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் வாழும்படி அவருடைய சாயலினால் உருவாக்கப்பட்ட ஒரு நபராக நம்முடைய உண்மையான மனிதகுலத்தை நமக்குத் திரும்பக் கொடுக்க வந்தார் . இந்த இரண்டு சத்தியங்களும் நாம் முழு மனதுடன் குமாரனுக்காக வாழ்வதன் மூலம் அவரைக் கனப்படுத்த வேண்டும் என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றன. "நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் என் வாழ்க்கையில் நான் எந்தப் பக்கத்தைத் தேர்ந்தெடுப்பது?" என்று என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டும்.அனலுமின்றி குளிருமின்றி வாழ்பவர்கள் முழுவதுமாய் அவைகளை விட்டுவிடாமல் இயேசுவைப் பின்பற்றும்படி முயலுவார்கள் (வெளிப்படுத்துதல் 3:16). நான் கர்த்தரின் பக்கம் முழுமனதுடன் இல்லை என்றால், இயல்பாகவே, நான் பாவத்திலே நிலைத்திருந்து, வாழ்க்கையின் தோல்விப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறேன்! எவ்வாறாயினும், நிலையான சீஷர்களுக்கு ஒரு நற்செய்தி என்னவென்றால், குமாரன் பிசாசின் அந்தகார கிரியையை நீக்கி, நித்திய பிதாவுடன் என்றென்றும் வாழ்க்கையைக் காண நம்மை விடுவிப்பார்!** * எபிரேய பாஷையில் ὁ ποιῶν τὴν ἁμαρτίαν என்றால் "மீண்டும் மீண்டும் பாவச் செயல்களைச் செய்வது" என்று பொருள். ** λύσῃ τὰ ἔργα என்ற வினைச்சொல் பிசாசின் செயல்களில் இருந்து "விடுதலை மற்றும் விடுவித்தல்" என்று பொருள்படும்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் சதா காலங்களின் ஜெய ராஜாவே , மெய்யாகவே நீர் மாத்திரமே என் இருதயத்தை சரியாக ஆளுபவர் . நான் உமக்கு என் விசுவாசத்தை உறுதியளிக்கிறேன். தயவுக்கூர்ந்து பாவத்துடனான எனது போராட்டங்களை தள்ளி வைக்க உதவிச்செய்யும் ,மற்றும் உமக்காகவும், நித்திய ஜீவனுக்காகவும் உறுதியான விசுவாசத்துடன் வாழ என்னை உற்சாகப்படுத்தும். என் கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து