இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான நமது பெலன் நம் கடந்த கால அனுபவங்களிலிருந்தும், மற்றவர்கள் நம்மை ஊக்கப்படுத்துவதிலிருந்தும், வேதத்தில் உள்ள சத்தியத்தைப் பற்றிய அறிவிலிருந்தும் வருகிறது.இருப்பினும், கடைசியாக , நமது பெலன் தேவனின் சத்துவத்தின் வல்லமையிலிருந்து வருகிறது. இந்த வல்லமை மாத்திரமே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியது என்பதை கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்ட பவுல் எபேசியர்களுக்கு எழுதிய கடிதத்தில் பயன்படுத்துகிறார் (எபேசியர் 1: 19-20). தேவன் நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராயிருக்கிறார் (எபேசியர் 3:20-21). எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை தரித்தவர்களாய் , ஆத்தும ஒழுக்கத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது , ​​தேவன் தம்முடைய வல்லமையினாலும் பெலத்தினாலும் நம்மை ஆசீர்வதிக்கிறார். நாம் தேவனுடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்பட்டு வாழ முடியும்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, அப்பா பிதாவே, அன்பான மேய்ப்பரே, அடியேனை பிசாசின் தந்திரங்களுக்கும், சோதனைகளுக்கும் எதிர்த்து நிற்க உம்முடைய வல்லமையினாலும், கிருபையினாலும் பெலப்படுத்தும் . இயேசுவின் நாமத்தினாலே கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து