இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்ம பெரும்பாலும் விரும்பும் காரியங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம், நாம் சிறப்பாகச் செய்கிறோம், அல்லது சாதிப்பதில் ஆர்வமாக இருக்கிறோம். அவருடைய ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தின் ஒவ்வொரு கணுக்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நம்முடைய ஆவிக்குரிய பலவீனமான காரியங்களிலும், நமக்கு உற்சாகமற்றும் , ஆர்வமற்றும் தோன்றும் காரியங்களில் நாம் ஒழுக்கத்துடனும், வளர்ச்சியடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நமது எதிராளியாகிய பிசாசானவன் (தந்திரமுள்ளவன்) கெர்ச்சிக்கிற சிங்கம் போல , நம்மை எப்படி விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றி திரிகிறான்(1பேதுரு 5:8). எனவே நமது ஆர்வம் மற்றும் பலம் உள்ள காரியங்களில் மட்டும் விடாமுயற்சியுடன் ஈடுபடாமல், எல்லாக் காரியங்களிலும் விடாமுயற்சியுடன் செயல்படுவோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, அடியேன் எந்த பாவத்திற்கு மிகவும் அதிக பாதிக்கப்படக்கூடிய காரியங்களிலும், சோம்பளுடன் இருக்கும் விஷயத்திலும் என்னை பெலப்படுத்தியருளும் . நான் பலவீனமாக காணப்படும் காரியங்களை உற்று கவனிக்க என் கண்களைத் திறந்து உதவியருளும் . உமது பரிசுத்தத்தை ஆர்வத்துடன் தேட என் இதயத்தை உற்சாகப்படுத்துவீராக . இயேசுவின் பெயராலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து