இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் ஈவுகளை நேசிக்கவில்லையா! குறிப்பாக அவை உண்மையாக கொடுக்கப்பட்டால், எந்த ஒரு நிபந்தனையில்லாமலும் , நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைப் பெறுவதுதான். நாம் பெற்றதான மாபெரிதான ஈவு, அவை நம் முயற்சியினால் உண்டானதல்ல. இது தேவன் அருளின ஈவு . நாங்கள் அதை சம்பாதிக்கவுமில்லை , அதற்கு தகுதியானவர்களுமில்லை அல்லது அவைகளை விலைக்கொடுத்து வாங்கவுமில்லை. தேவன் அதைத் தம்முடைய மகா பெரிய ஜீவபலியின் மூலமாக அதை நமக்கு ஈவாக கொடுத்தார், அதனால் நம்முடைய இரட்சிப்பு நம்முடைய பெருமையாக இருக்காது, மாறாக அவைகள் அவருடைய மகா தயவாக இருக்கும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , இயேசுவை நீர் அனுப்பியதற்காகவும், என் பாவத்திற்கான கடனை செலுத்தியதற்காகவும் என்னால் வார்த்தையினால் ஒருபோதும் உமக்கு நன்றி சொல்ல முடியாது. உமது கிருபையை நான் ஒருபோதும் விருதாவாக கருதக்கூடாது அல்லது உம் ஈவின் விலையை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே சமயம், பிதாவே , என் இரட்சிப்பு என் தவறுகளைச் சார்ந்தது அல்ல, ஆனால் உமது கிருபையை சார்ந்தது என்பதை அறிந்து நான் நம்பிக்கையுடன் வாழ விரும்புகிறேன். இவ்வளவு விலையேறப்பெற்ற ஈவின் காரணமாக, இவ்வளவு அற்புதமான ஈவை பெற்றதில் நான் அடைந்த மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று உமக்காக வாழ என்னை அர்ப்பணிகிறேன் . என் நம்பிக்கை மற்றும் கிருபையின் ஆதாரமான இயேசுவின் கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து