இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரலோகம் என்பது நாம் இருதயத்தால் பார்க்கும் ஒன்று. நாம் உற்சாகமிழந்து, சந்தேகம் மற்றும் மனச்சோர்வு அடையும் போது , நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்கள் தேவைப்படுகிறது. நாம் இருளில் இருக்கும் போது விடியல் நமக்கு அவசியமாக இருக்கிறது , நம்பிக்கையின் விடியலையும், நமது சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியத்தையும் நோக்கி பார்க்கிறோம். ஆனால் சூழ்நிலைகள் மோசமாகத் தோன்றும்போது, ​​ இவற்றை நினைவில் வைத்துக்கொள்ள ஒரே வழி, நாம் தேவனை துதிப்பதும், அவரை நோக்கி ஜெபிப்பதும், அவைகளை குறித்து தேவனானவர் சொன்ன வாக்குறுதிகளைப் வாசிப்பது மாத்திரமே உகந்ததாகும் .

என்னுடைய ஜெபம்

தேவனே, நீரே என் நம்பிக்கை.நான் உம்மையும் உம் வாக்குறுதிகளையும் உறுதியாய் நம்புகிறேன். ஆனால் சில வேளைகளில், இப்போது போலவே, என்றும் நீர் என் விண்ணப்பங்களுக்குப் பதிலளிப்பீர் என்றும், என் வாழ்க்கையில் நான் உம் மேல் கொண்ட நம்பிக்கையின் படிச் செய்வீர்கள் என்றும் என் நம்பிக்கையுடன் நான் போராடுகிறேன். தயவு செய்து உமது ஆவியால் என்னை நிரப்பி, என் சந்தேகங்களுக்கு ஆறுதல் அளித்து, நான் தைரியமாக உமக்கு ஊழியஞ் செய்து, உமது கிருபையைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள என்னிலே ஆர்வத்தை உண்டுப்பண்ணும் . என் கர்த்தராகிய இயேசுவின் மூலமாக நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து