இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் செய்யமுடியாததை இயேசுவானவர் செய்து முடித்தார்; அவர் தேவனுக்கு முன்பாக நேர்த்தியாக வாழ்ந்தார். பாவம் நம் வாழ்வில் அவசியமில்லை என்றும் அது நம்மை சிறைபிடிக்க வேண்டியதில்லை என்றும் அவர் காட்டினார். அவருடைய மன்னிப்பு மற்றும் பரிசுத்தப் படுத்தும் கிருபையில் நாம் பங்குகொள்வது மட்டுமல்லாமல், தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழும் ஆற்றலை நாம் பெறுவதற்காக அவர் தம்முடைய ஆவியை நம்மீது ஊற்றினார். இயேசுவானவரே நம்முடைய பாவங்களுக்கான காணிக்கையும் , நம்முடைய இரட்சகருமானவர்..

என்னுடைய ஜெபம்

பிதாவே அடியேனுடைய பாவங்களுக்காக நீர் கொடுத்த பலிக்காக உமக்கு நன்றி. கர்த்தராகிய இயேசுவே, பாவத்திலிருந்து என்னை மீட்கும் படி பயங்கரமான விலையைச் செலுத்தத் தயாராக இருந்ததற்காக உமக்கு நன்றிகளை செலுத்துகிறேன். பரிசுத்த ஆவியானவரே என்னில் வாசம் செய்து , தேவனுக்கென்று வாழ எனக்கு அதிகாரம் அளித்ததற்காக உமக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேவனே நீர் அளித்த இரட்சிப்புக்காக உமக்கு நன்றி! இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து