இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஐயோ! நான் வரிகளை வெறுக்கிறேன். ஆனால் நான் ஒப்புக்கொள்ள வேண்டும், அந்த வரிகள் வழங்கும் பல சலுகைகள் மற்றும் ஆசீர்வாதங்களை நான் அனுபவிக்கிறேன். பவுலானவர் ரோமர் 13ஆம் அதிகாரத்தில் இவைகளை நமக்கு நினைப்பூட்டுகிறார், இவ்வுலகத்திற்குரிய அதிகாரிகள் அராஜகம், குழப்பம் மற்றும் அக்கிரமத்தைத் தடுக்க தேவனால் ஏற்படுத்தப்பட்ட கருவிகளாயிருக்கிறார்கள் . ஒரு கிறிஸ்தவராக, நான் பெரும்பாலான சட்டங்களிலிருந்து விடுபடுகிறேன், ஏனென்றால் இயேசுவின் மீதான எனது நம்பிக்கை சட்டத்தினுள்ள விதிகளை காட்டிலும் எனது நடத்தை மிகக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப் போகிறது. ஆனால் நான் ஒரு நல்ல குடிமகனாக, ஒரு நல்ல நிதி மேலாளராக, நல்ல மரியாதைக்குரிய அண்டை வீட்டாராக, தகுதியுள்ளவர்களை மனப்பூர்வமாக கௌரவிக்கும் ஒரு நபராக இருப்பதற்கு எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது (நான் அதற்கு "கடன்பட்டிருக்கிறேன் " என்று பவுலானவர் கூறுகிறார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , நான் உமக்கு விசுவாசமாக இருப்பேன். நீர் மட்டுமே மகத்துவம் நிறைந்தவர் , ஆளுகைசெய்கிறவர் மற்றும் ராஜாதி ராஜா. ஆனால் நீர் என் அரசாங்கத்தை கௌரவிக்க என்னை அழைத்ததால், இதுபோன்ற ஒரு தேசத்தில் நான் ஜீவிக்க நீர் என்னை மிகவும் ஆசீர்வதித்துள்ளதால், உம் கிருபையை எனக்கு மிகவும் அதிகமாய் வழங்கியதால், உம்முடனான எனது விசுவாசத்தையும், என் நாட்டின் எனது குடியுரிமையும், நான் இன்று சந்திக்கும் நபர்களுக்கு எனது மரியாதையையும் கொடுத்து உம்மை கனப்படுத்தும் வகையில் இன்று நான் வாழ்வேன் என்று உறுதியளிக்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து