இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஜெபிக்கும் ஜனங்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் அதைவிட அதிகமாக, நாம் மக்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று தேவனானவர் விரும்புகிறார்.தேவபக்தியும் பரிசுத்தமும் நிறைந்த சமாதானமுள்ள மற்றும் அமைதியான வாழ்க்கையை நாம் வாழ்வதே அந்த வகையான ஜெப ஜீவியத்தின் ஆசீர்வாதமாகும். எனவே ஜெபியுங்கள், இயேசுவுக்குள் அன்பான சகோதரரே , உலக சமாதானம் அதைச் சார்ந்தது போல் ஜெபியுங்கள், ஏனென்றால் ஜெபம் அவைகளை செய்து முடிக்கிறது !

என்னுடைய ஜெபம்

மகத்துவமும் பரிசுத்தமும் நிறைந்த தேவனே , உமது மகத்துவம் என் மனதிற்கு அப்பாற்பட்டது, ஆனால் உம்முடைய கிருபையும் என்னை சந்தித்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாதையை கற்பிக்கிறது. என் ஜெப வாழ்க்கை உற்சாகம் இழந்திருக்கும் வேளைகளில் என்னை மன்னியுங்கள். என் ஜெபமானது தவறுகளை மட்டுமே கவனம் செலுத்த அனுமதித்ததற்காக என்னை மன்னியுங்கள். தேவனே , என் உள்ளத்தில் ஒரு ஜெபிக்கும் ஆவலை தூண்டுவதற்கு உமது பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துங்கள், அதனால் நான் உம்மிடமும் உம் சமூகத்திலும் மாத்திரமே முழு நிறைவை பெற்றுக்கொள்ள வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே , பரிசுத்த ஆவியின் ஒத்தாசையோடே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து