இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் நம்மால் பேச முடியாவிட்டாலும், நம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதை வாஞ்சிக்க வேண்டுமோ அதை நாம் ஒப்புக்கொடுக்கலாம் : கர்த்தரையே சேவிப்போம்! ஆனால் அர்ப்பணிப்பை விட, நாம் மற்றவர்களுக்கு மாதிரியாக இருந்து வழி நடத்துவோமாக . "இன்று நான் கர்த்தரையே சேவிப்பேன் !" அப்போது அவர்களும் எங்களுடன் சேர்ந்து கர்த்தரை சேவிப்போம் என்று கூறலாம்.

என்னுடைய ஜெபம்

சாந்தமுள்ள மேய்ப்பரே , என் குடும்பத்தினரை உம்மை அதிகமாக நேசிக்க எப்படி வழிநடத்துவது என்று எனக்கு ஞானத்தை தாரும் . தயவுசெய்து என் பெற்றோரை ஆசீர்வதித்தருளும். உம்மீது அவர்களுக்குள்ள விசுவாசத்திற்காக உமக்கு நன்றி. தயவுகூர்ந்து எனக்கு தைரியத்தையும் உணர்திறனையும் கொடுங்கள், அதினால் உம்மை குறித்ததான சத்தியத்தை என் பிள்ளைகளுடன் திறம்பட பகிர்ந்து கொள்ள முடியும். தேவனே , கர்த்தருக்குள் பிள்ளைகளை வளர்க்க விரும்பும் பெற்றோரை ஆசீர்வதியும் , ஏனென்றால் அவர்கள் எனக்கு அருளின பிள்ளைகளை ஒரு நாள் கர்த்தருக்குள் விவாகம் செய்து கொள்வார்கள். நீர் அறியப்படும் , ஸ்தோத்தரிக்கப்படும் , மகிமைப்படும் மற்றும் நேசிக்கப்படும் இடமாக எனது வீடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் தாழ்மையுடன் ஜெபித்து கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து