இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் தம்முடைய சித்தத்தை அறிந்துகொள்ள எவ்வாறு உதவி செய்கிறார் ? தேவனானவர் வேதவசனங்களை நமக்கு கொடுத்திருக்கிறார் மற்றும் அந்த வேதவசனங்களைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்படி பரிசுத்த ஆவியானவரையும் கொடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. மிகவும் ஆழமான மற்றும் மறைமுகமாக வரையறுக்கப்பட்ட வழிகளைப் பற்றி என்ன சொல்லுவோம் ? நம்மில் பெரும்பாலோர் "ஆவிக்குரிய இடைப்படுதல் ஆங்காங்கே பெறுகிறோம் " - நான் "தேவனுடைய இடைப்படுதல் " என்று அழைக்கிறேன். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம்மில் அநேகர் ஜெபத்திலே ஆவியியானவரின் உதவி மற்றும் வழிகாட்டுதலைக் கேட்டு பல நிகழ்வுகளை நடத்தியுள்ளோம். ஒரு நண்பர் சரியான நேரத்தில் நம்மை அழைத்து பேசுகிறார் அல்லது எழுதுகிறார்; நாம் ஒரு கட்டுரையைப் படிக்கிறோம் அல்லது ஒரு பிரசங்கத்தைக் கேட்கிறோம், அந்த பிரசங்கமோ அல்லது கட்டுரையோ நம்முடைய கவலை அல்லது குழப்பத்திற்கான காரணத்தை அல்லது தீர்வை நமக்கு சுட்டிக்காட்டுகிறது ; நம்முடைய தொழுகையில் உள்ள பல பாடல்கள் நாம் தேவனின் வழிகாட்டுதலைத் தேடும் காரியங்களில் நம்மைக் குற்றப்படுத்துகின்றன; அல்லது, ஒரு கடினமான சூழ்நிலையில் எது சரி?எது தவறு? என்று பகுத்தறிய உதவும் நம் மனசாட்சியின் மீது ஒரு அழுத்தத்தை நாம் உணர்கிறோம். நாம் சந்தேகப்படாமல் ஞானத்திற்காக ஜெபித்தால், அவர் அதை நமக்குத் தருவார் (யாக்கோபு 1: 5-6) என்றும், நாம் அவரை மெய்யாக தேடினால், அவரைக் கண்டுபிடிப்போம் என்றும் தேவன் உண்மையாய் கூறுகிறார் (மத்தேயு மத்தேயு 7: 7-8 ) அவருடைய சத்தம் இடி முழக்கங்களை எழுப்புகிறது மற்றும் சில நேரங்களில் மெல்லிய சத்தத்தினால் அற்புதமான வழிகளில் நம்மை நடத்துகிறது !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , என் வாழ்க்கையில் அநேக முக்கியமான விஷயங்களைப் பற்றிய உமது சித்தத்தை அறிய எனக்கு உதவிச் செய்யும் . எனக்கு கொடுக்கப்பட்ட மனித ஞானத்தின் அடிப்படையில் நான் முடிவுகளை எடுக்க விரும்பவில்லை. நான் பின்தொடர விரும்பும் திசையில் உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக என்னை வழிநடத்துங்கள், மேலும் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் அங்கு செல்ல எனக்கு பெலன் தாரும் . இடி ஓசையின் சத்தம் அல்லது மெல்லிய சத்தத்தினாலும் உம் வழியை எனக்கு இன்னும் தெளிவாக காண்பிக்கும் அளவுக்கு என் வாழ்க்கையைப் குறித்து அக்கறை கொண்டதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து