இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இது அழகான சொற்றொடர் அல்லவா! "தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் நினைத்து பார்க்க முடியாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்". தேவன் எவ்வளவு அற்புதமானவர் என்பதைப் பற்றி பேசுவதற்கு அல்லது சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுவதற்குப் பதிலாக, ஜெபத்தில் அவரைப் ஸ்தோத்திரிப்போமாக .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள , நித்திய தேவனே ! நீர் ஒருவரே மெய்யாகவும், முழுமையாகவும் பரிசுத்தமானவர். உம் வழிகளின் தொலைதூர எல்லைகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் நான் உம்மை நேசிக்கிறேன். என்னுடைய சிறந்த நாட்களில் நீர் என் எண்ணங்களை கடந்து நன்மை செய்து இருக்கிறீர், என்னைப் போன்ற ஒருவரை மீட்க நீர் ஏன் இவ்வளவு மாபெரிதான விலையை செலுத்தினீர் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அன்பான தேவனே , என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நான் உமக்கு நன்றி மற்றும் துதிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து