இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இதை நாம் சீஷத்துவத்தின் முரண்பாடு என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன். கிறிஸ்துவைப் பின்பற்றுவதென்றால், நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றுவதாகும். கிறிஸ்துவைப் பின்பற்றுவதென்றால், இவ் வாழ்க்கையில் சொல்லப்படாத ஆசீர்வாதங்களையும், வரவிருக்கும் வாழ்க்கையில் தேவனோடு நித்திய ஜீவனையும் நாம் பெற்றுக்கொள்வதாகும் . இது கடினமானதா? ஆம், சில வேளைகளில் . ஆனால் வாழ்க்கை கடினமானது தான். இயேசுவானவர் வாக்களித்தப்படி நம்முடைய பாரம் இலகுவானதா? ஆம், ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையை நாம் விருதாவாய் வாழ்வதில்லை, தேவன் விரும்பின வண்ணமாய் நாம் நம்முடைய வாழ்க்கையை வாழ்கிறோம், நம்முடைய ஜீவன் முடிந்தபின், அது உண்மையாய் நிறைவடையவில்லை! நாம் பிதாவோடே கூட வாழ நித்திய வீட்டிற்கு செல்கிறோம்.

என்னுடைய ஜெபம்

தேவனே, அடியேன் எதிர்கொள்ள இருக்கும் சவால்களை சந்திக்க தைரியத்தை தாரும். நான் சந்திப்பவர்களுடன் தகுந்த முறையில் நடந்துகொள்ள எனக்கு இரக்கத்தை தாரும். என்னை ஆசீர்வதிக்க நீர் நடப்பித்த சகலவற்றிற்காகவும் நன்றியுள்ள இருதயத்தோடே இருக்க செய்தருளும். இயேசுவுக்காக வாழ்வதே எல்லாத் தேர்வுகளிலும் சிறந்தது என்பதைப் பார்க்கும்படி எனக்கு தெளிவுள்ள மனக்கண்களை தாரும் . ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து