இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில சமயங்களில் நாம் ஒதுக்கிவிடப்பட்டதாகவும், தனிமையாகவும் உணரக்கூடிய உலகில், யாரோ ஒருவர் நமக்காகவும் நமது ஆவிக்குரிய தேவைகளுக்காகவும் ஜெபிக்கிறார் என்பதை அறிவது மிகவும் முக்கியமானது. இன்றைக்கான வசன ஊழியத்தில் அங்கம் வகிக்கும் ஆயிரக்கணக்கானோரை நினைத்துப் பார்க்கையில், அவர்கள் ஒவ்வொருவரும், நீங்களும் , உலகெங்கிலும் உள்ள மக்களுடன் ஆவிக்குரிய பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறீர்கள் என்பதை அறிந்து ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்காமல் இருக்க முடியாது. நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்போம். மேலும், அவர் ஒருபோதும் சந்தித்திராத கொலோசிய நண்பர்களுக்காக பவுல் ஜெபித்ததை விட சிறந்த ஜெபம் எதுவும் இருக்க முடியாது - "எல்லா ஆவிக்குரிய ஞானம் மற்றும் புரிதல் மூலம் அவருடைய சித்தத்தைப் பற்றிய அறிவால் உங்களை நிரப்பும்படி நான் தேவனிடம் கேட்டுக்கொள்கிறேன்." இன்று ஒருவருக்காக ஒருவர் எப்பொழுதும் ஜெபம் செய்வோமாக .

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற பரலோகத்தின் பிதாவே , இன்று உமக்கு முன்பாக வந்து உமக்காக வாழ முற்படும் மற்ற விசுவாசிகளுக்காக நான் ஜெபிக்கிறேன். இன்றைக்கான வசனப் பயணத்தில் என்னுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்காக நான் குறிப்பாக ஜெபிக்கிறேன். நாங்கள் உலகம் முழுவதும் வாழ்ந்தாலும், எல்லாவிதமான தேவைகளையும் கொண்டிருந்தாலும், உம்முடைய சித்தத்தை அறிந்து வாழ்வதும், நாங்கள் உம்மால் அறியப்பட்டவர்கள் மற்றும் நேசிக்கப்படுகிறோம் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதும் எங்களுடைய அத்தியாவசிய தேவை என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். உம்முடைய ஆவியானவரால் வழிநடத்தப்படும் ஞானம் மற்றும் புரிதலின் மூலமாக எங்கள் அனைவரையும் உமது சித்தத்தின் அறிவால் நிரப்பவும். நாங்கள் உம்மைத் தெரிந்துகொள்ளவும், உம்மை கனப்படுத்தவும் , உமக்காக ஊழியம் செய்யவும், இவ்வுலகத்தின் முடிவில் உம்மை முகமுகமாய் பார்க்கவும் விரும்புகிறோம். எங்கள் மூத்த சகோதரராகிய இயேசுவின் நாமத்தினாலே , நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து

Important Announcement! Soon posting comments below will be done using Disqus (not facebook). — Learn More About This Change