இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சகோதரன் அல்லது சகோதரியைக் கண்டு, அந்த விலையேறப்பெற்ற நபரிடம் நீங்கள் செய்கிற எல்லா காரியமும் சரியாக இருக்கிறது என்று எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா ? இந்த காரியத்தை செய்து அதிக நாட்கள் ஆகிவிட்டது என்று நீங்கள் நினைக்கவில்லையா? இன்று நம் மகிழ்ச்சியையும் அங்கீகாரத்தையும் அந்த புதிய கிறிஸ்தவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டாமா? கிறிஸ்துவுக்குள் இருக்கும் மற்றவர்களை ஊக்குவிப்பதிலும் உறுதிப்படுத்துவதிலும், அவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவதிலும் - குறிப்பாக புதிய விசுவாசிகளுக்கு அதிக பொறுப்புடனும் இருப்போம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவருக்காக பிதாவானவர் என்ன செய்தார் என்பதை நினைவில் கொள்கிறீர்களா? பிதாவானவர் குமாரனிடம் அவரை தாம் அதிகமாக நேசிப்பதாகக் கூறினார், அவரைத் தம்முடைய குமாரன் என்று கூறினார் , அவரில் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டார் (லூக்கா 3:21-22). இயேசுவானவருக்கே தம் ஊழியத்தை ஆரம்பித்தபோது இந்த மாதிரியான உற்சாகப்படுத்தும் வார்த்தை தேவை என்றால், இன்று இயேசுவைப் பின்பற்றும் ஒருவருக்கு இது எவ்வளவு அதிகமாகத் தேவை என்று சிந்தியுங்கள்!

என்னுடைய ஜெபம்

காணாமற் போன ஆத்துமாக்களை இரட்சிக்கும் நல்மேய்ப்பரே , எங்கள் திருச்சபையிலும் என் வாழ்க்கையிலும் கொடுத்த புதிய கிறிஸ்தவர்களுக்காக உமக்கு நன்றி. அவர்களை ஆசீர்வதியுங்கள், சாத்தானிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும், மேலும் இந்த புதிய விசுவாசிகளை நாங்கள் உற்சாகப்படுத்தும்போது அவர்களை எடுத்து பயன்படுத்தியருளும் . கிறிஸ்துவுக்குள் முதிர்ச்சி அடைவதற்கான அவர்களுடைய வாழ்க்கை பயணத்தில் இந்தப் புதிய விசுவாசிகளுக்கு உதவிசெய்து பெலப்படுத்தியருளும் . என் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து