இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பவுலானவர் தனது வாழ்க்கையின் இறுதி காலத்தில் மிகவும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டார் , அவர் தேவனிடம் வழிநடத்திய அநேகர் அவரை அந்த சூழ்நிலையில் கைவிட்டனர். ஆயினும் , தேவன் தன்னைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமாய் இருந்தது! இயேசுவை ஆண்டவராக எண்ணி அவர் தனது வாழ்க்கையை முழுவதுமாய் ஒப்புக்கொடுத்தார், மேலும் பவுலின் முயற்சிகள் வீணாகாமல் இருப்பதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உறுதிசெய்தார் . அவரது வாழ்க்கை, எதிர்காலம் மற்றும் நித்திய வாழ்க்கை ஆகிய யாவையும் ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்தார் . அவர்களும் கர்த்தருக்குள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று அவர் நம்பிக்கையுடன் இருந்தார் (ரோமர் 8:32-39). பவுலானவர் அதிக பயத்துடனும் பக்தியுடனும், பிதாவாகிய தேவனுக்கு மாத்திரமே அறிந்த ஒரு குறிப்பிட்ட நாளில், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து திரும்பி வருவார், அந்நாளிலே எல்லா முழங்காலும் முடங்கும்படியாகவும் , மேலும் ஆண்டவர் மீது பவுலானவர் கொண்ட நம்பிக்கை மகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்தப்படும் என்று அவர் நம்பினார். பவுலின் நம்பிக்கை சரியான இலக்கை நோக்கி இருந்தது என்று நான் முழுநிச்சயமாய் நம்புகிறேன். என் வாழ்க்கையும் எதிர்காலமும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும் . இதே நம்பிக்கையை நீங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் விண்ணப்பமுமாய் இருக்கிறது !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , நான் நம்பிக்கையாய் இருக்கிறேன் , ஆயினும் தயவுக்கூர்ந்து என் விசுவாசத்தை பெலப்படுத்துங்கள். நான் எதைச் சகித்தாலும், உம் மீதான என் நம்பிக்கை உறுதியாக இருக்கட்டும், என் நம்பிக்கை எப்பொழுதும் உற்சாகமுள்ளதாய் இருக்கட்டும். நான் என்னையும் என் நம்பிக்கையையும் முழுவதுமாகவும் உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். எனக்கு முன்பாக உள்ள எல்லாவற்றிலும் நீர் என்னைக் கடக்கச் செய்து , மிகுந்த மகிழ்ச்சியுடன் உம் மகிமையான சமூகத்திலே என்னை வழிநடத்தி செல்லுவீர் என்று நான் நம்புகிறேன். இயேசுவின் மகிமையுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து