இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லா முயற்சிகளையும் செய்!" அது ஒரு சவாலான காரியம். எவ்விடத்திலே அந்த உழைப்பை போடவேண்டுமென்று நாம் கூர்ந்து பார்க்கவேண்டும்: சமாதானமும்,அந்நியோந்நிய பக்திவிருத்தியும் இந்த உபதேசத்தின் இரு பக்கங்களும் இரு வழிப் பொறுப்புகளுமாகும். நான் சமாதானத்தை அடையப் போகிறேன் என்றால், நான் அதைப் பின்பற்றி,பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் பக்திவிருத்தி அடையவேண்டும், மற்றும் பக்திவிருத்தியை பெற்றுக்கொள்ள மனந்திறந்திருக்க வேண்டும், அந்நியோந்நிய பக்திவிருத்தி நடக்க வேண்டுமென்றால் அப்படியாகும். மாறாக சொல்லவேண்டுமென்றால், நாம் தேவனுடைய வீட்டிலே மற்ற ஜனங்களோடு ஜீவிக்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய குடும்பத்தில் உறவுகள் செயல்படுவதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதற்கு கடுமையான முயற்சி தேவைப்படும் என்று அவர் நமக்கு நினைவூட்டுகிறார். ஆனால் இவையெல்லா குடும்பங்களின் உறவுகளில் உண்மையானதா? அன்பு என்பது தியாகம், முயற்சி, பிறருக்கான அக்கறை என்பதாகும். எவ்வாறாயினும், நம் அன்பை நாம் முழு இதயத்துடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​​​அது நம்மிடம் திரும்புவதைக் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் பிதாவே, நான் பொறுமையற்றும், சுயநலமாயும் இருந்ததற்காக மன்னியும். உம்முடைய குடும்பத்தில் உள்ள அங்கத்தினருடன் வாக்குவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளில் நான் அடிக்கடி காண்பிக்கும் மோசமான போட்டி மனப்பான்மையை என்னிலிருந்து அகற்றும். நான் குடும்பத்தில் உள்ள அங்கத்தினருக்கு ஆசீர்வாதமாகவும் ஊக்கமாகவும் இருக்கக்கூடிய வழிகளை காணும்பாடி உமது ஆவியால் என்னை உற்சாகப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து