இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மகிழ்ச்சியோடு சிரிப்பு மற்றும் பாடலை விட சந்தோஷத்திற்கு சிறந்த விளக்கம் எதுவும் கிடையாது . நாம் மகிழ்ச்சியாக இருப்பதால் தேவனைத் துதிக்கிறோம்! எங்கள் கீர்த்தனம் தடுக்கப்படவில்லை அல்லது பின்வாங்கப்படவில்லை, ஆனால் இருதயத்தைப் போலவே உற்சாகமாகவும் ஒலி நிறைந்ததாகவும் இருக்கிறது. நன்றியறிதல் நம்மை பிதாவின் சமூகத்திற்கு கொண்டுசெல்கிறது மற்றும் இரட்சிக்கப்பட்டதினால் உண்டாகும் மகிழ்ச்சியே துதிப்பதற்கு நம்மை வழிநடத்துகிறது.

என்னுடைய ஜெபம்

மிக அற்புதமான மற்றும் மகிமையுள்ள தேவனே , பாவம், மரணம், நியாப்பிரமானம் மற்றும் மாயமான காரியங்களிலிருந்து என்னைக் இரட்சித்ததற்காக மிக்க நன்றி. என்னைக் இரட்சித்ததற்காகவும் , உமது பரிசுத்த ஆவியின் மூலம் எனக்கு உறுதி அளித்ததற்காகவும் உமக்கு நன்றி, நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் உம் சமூகத்திலே வர முடியும். உம்முடைய அன்பும் கிருபையும் எனக்கு நம்பிக்கையை அளித்தது மட்டுமல்லாமல், என்னை உம்முடைய பிள்ளையாகவும் மாற்றியுள்ளது. என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்து , என் துதிப் பாடல்களால் என்னை ஆசீர்வதிப்பீராக . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன், என்றென்றும் உமது துதியை உரக்கச் சொல்வேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து