இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உம்மை குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் வாழ்க்கையின் அநேக நேரங்களில் நான் விழுந்துவிட்டேன் . மிகவும் மோசமான சில தருணங்களில் நான் தடுமாறிவிட்டேன் . நான் என் சொந்த கால்கள், காலணி சரிகை, தடைகள் மற்றும் சுத்தமான காற்றினால் விழுந்துவிட்டேன் . இருப்பினும், எனது ஆத்தும வாழ்வில் , நான் அவ்வப்போது விழுந்தாலும் , கர்த்தர் என்னை முழுமையாக தள்ளுண்டுபோக விடுவதில்லை என்று நான் உறுதியாயிருக்கிறேன். நான் பாதாளத்தின் ஆழத்தில் மூழ்கிவிடப் போகிறேன் என்று நினைக்கும் போது, ​​பிதாவின் அன்பும், தேறுதலும் , அக்கறையும், தேவனுடைய வார்த்தைகளும் , ஊழியக்காரரும் , உதவியாளர்களும் என்னை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள். தேவன் தமது கையினால் என்னைத் தாங்குகிறார். என்னுடைய சோதனை நேரங்களில் என்னோடிருக்கிறார். அவர் நம்மை பாதுகாக்க வல்லமையுள்ளவர். என்னுடைய வாழ்க்கையின் ஜீவியத்தில் அவர் பிரியமாயிருக்கிறார் என்று நம்புகிறேன். நீங்கள் எப்படி?

என்னுடைய ஜெபம்

பிதாவே, என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய நிலையான வழிநடத்துதலுக்காக நன்றி. அடியேன் வீழ்ந்துபோன நேரங்களில் என்னை தூக்கியெடுத்தமைக்காகவும், நான் பாதிக்கப்படும் போது என்னை பாதுகாத்தமைக்காகவும் , நான் உடைந்துபோன வேளைகளில் ஆறுதல்படுத்தியதற்காகவும் உமக்கு நன்றி. உம்முடைய கிருபைக்காக, மகிமைக்காக, பிரசன்னத்திற்காக அடியேன் உம்மை துதிக்கிறேன். இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உமக்கு துதிகளையும் நித்திய மாட்சிமையையும் செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து