இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில விஷயங்களை நீங்கள் மாற்றவோ, பரிமாறிக் கொள்ளவோ அல்லது புதுப்பிக்கவோ மாட்டீர்கள். நாம் வாழும் காலத்தில் கணினி செயலிகள் ஒவ்வொரு மாதமும் பெரிய முன்னேற்றங்களையும் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிக்கின்றன மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய மேம்படுத்தல்களை வெளியிடும், எல்லாவற்றின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பைத் தேடுவதில் நாம் அனைவரும் திட்டமிடப்படுகிறோம். எளிமையான ஆனால் ஆழமான சத்தியம் என்னவென்றால், இயேசுவே ஆண்டவர். இதற்கு ஒருபோதும் மேம்படுத்தல் தேவையில்லை. இதற்கு தகுதியான போட்டியாளர் எப்பொழுதும் இல்லை. இதற்கு மாற்றம் என்றுமே தேவையில்லை. உண்மையில், நம் வாழ்க்கையின் அடிப்படையான இந்த காரியத்திலிருந்து நாம் விலகிச் சென்றால், நம் இருதயத்திற்கு நெருக்கமான அனைத்தையும் நாம் ஆபத்தில் ஆழ்த்துகிறோம். ஆனால் நாம் அதை பின் தொடர்ந்தால், நாம் அதிலே வளர்ந்தால், இந்த சத்தியத்தில் நம்மை நாமே வேரூன்றி, அதை நம் வாழ்வின் அடிப்படையான மற்றும் யதார்த்தமானதாக மாற்றினால், நமது எதிர்காலம் பாதுகாப்பானது, நமது வெற்றி உறுதி!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , இயேசுவின் கர்த்தத்துவம் பற்றி எளிய, சவாலான மற்றும் மாறாத சத்தியத்திற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். உமது ஆவியின் மூலம், என்னுடைய கிரியையிலும் , எனது குடும்பத்திலும், அனுதின ஜீவியத்திலும் அவருடைய கர்த்தத்துவத்தை இன்னும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் வகையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளுகிறேன் . கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து