இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தருடைய கிருபையினாலும் வல்லமையினாலும் நாம் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம் .இதுவே வெளிப்படுத்துதலின் இறுதிச் செய்தியாகும்.இது வேதம் முழுவதும் பாடப்பட்ட பாடலாகும் . இதுவே தேவனிடமிருந்து நமக்குக் கிடைத்த உறுதி.நம் வாழ்க்கை விருதாவாய் போவதில்லை. தேவனுடைய மக்களைப் பழிவாங்குபவர்கள், இழிவுபடுத்துபவர்கள் மற்றும் அடிப்பவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள், அவருடைய அன்பான பிள்ளைகள், அவருடைய ஒளியின் பரிசுத்தவான்கள், அவர்கள் நேசிக்கும் பிதாவிடமிருந்து நியாயத்தையும் இரட்சிப்பையும் பெறுவார்கள்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , கடினமான இடங்களில் உம்முடைய சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உமது ஊழியர்களுக்காக நான் இன்று விசேஷமாக ஜெபிக்கிறேன்.இந்த விலையேறப்பெற்றவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலர் சித்திரவதைகளை எதிர்கொள்கின்றனர். மற்றவர்கள் புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர். சிலர் தங்கள் பணியிடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் .இன்று அவர்களுக்கு பெலனை தாருங்கள் .தயவு செய்து தீயவர்களின் தீய எண்ணத்திலிருந்து அவர்களை விடுவியுங்கள்.உமது வல்லமையின் கரங்களினால் அவர்களைப் பாதுகாத்து, தானியேலைப் போல, சிங்கத்தின் வாயிலிருந்து உமது மகிமைக்காக அவர்களை விடுவியும். இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து