இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மில் பலர் ஆவிக்குரிய பிரகாரமாகவும் , சரீர பிரகாரமாகவும் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும், தேவனுடைய ஜனங்களில் அநேகர் கஷ்டங்களையும் சிரமங்களையும் எதிர்கொள்கிறார்கள். கடினமான சூழ்நிலையில் இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். தேவன் உங்களை கைவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடைக்கப்பட்ட, மறக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுடன் தேவனானவர் அக்கறை காட்டுகிறார் மற்றும் தன்னை ஈடுபடுத்துகிறார் என்பதற்கு இயேசுவானவர் சிறந்த நினைப்பூட்டாலாகும் . கருப்பொருளை தொடர்ந்து வரும் ஜெபத்தின் மூலமாய் இன்று பல்லாயிரக்கணக்கானோர் உங்களுக்காக ஜெபிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் .

என்னுடைய ஜெபம்

தேவனே , யாருடைய வாழ்க்கை கடினமாயும், வலியுள்ளதாயும் மற்றும் சோகம் நிறைந்ததாயும் இருக்கிறதோ,தயவுக்கூர்ந்து அவர்களிடம் உம் சமூகம் இருப்பதாக . நருங்குண்ட ஆவியுடன் உள்ள ஒவ்வொரு விசுவாசியிடமும் தனிப்பட்ட முறையிலும் மற்றும் வலிமையான வழிகளிலும் ஊழியம் செய்ய எனக்கு உதவிச்செய்தருளும் . அன்பான பிதாவே , ஊக்கம் இழந்த ஒவ்வொரு கிறிஸ்தவரின் நம்பிக்கையையும் தயவுசெய்து மீண்டும் தட்டி எழுப்புங்கள். அவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் போது தயவுக்கூர்ந்து அவர்களுக்கு பெலன் தாரும். உமது ஆவியை வல்லமையுடன் ஊற்றி, சோர்வடைந்த மற்றும் பாரம் நிறைந்த ஒவ்வொரு இருதயத்தையும் பெலப்படுத்தியருளும் . உம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் அவரவர் நம்பிக்கையை நிலைநிறுத்த உதவுங்கள், உம்முடைய சமூகத்திலே ஒரு புதிய நம்பிக்கையைக் கண்டறிய அவர்களுக்கு உதவிச் செய்யும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து