இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு குணசாலியான பெண்ணின் விசுவாசம் மற்றும் கிருபையின் வாழ்க்கைக்காக நீங்கள் கடைசியாக எப்போது பாராட்டினீர்கள்? இப்படிப்பட்ட பெண்களில் பலருக்கு இன்றே பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்க நேரம் ஒதுக்குவோமாக . குணசாலியான பெண்களின் உண்மைத்தன்மை இல்லையென்றால் இன்று நாம் எங்கே இருந்திருப்போம்?அவர்கள் நமக்கும் நம் விசுவாசத்துக்கும் எவ்வளவு விலையேறப் பெற்றவர்கள் என்பதை இன்று அவர்களுக்குச் சொல்வோமாக .

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் வாழ்க்கையை வடிவமைத்த மற்றும் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய பின்வரும் குணசாலியான பெண்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்...தேவனே , உமது ஜனங்களுக்காக யாவற்றையும் செய்த உமது வேதத்தின் மேல் விசுவாசம் கொண்ட சிறந்த பெண்களுக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். உமது சபையை மற்றும் உமது விசுவாச பிள்ளைகளின் வளர்ச்சிக்கு இந்த சிறந்த பெண்மணிகள் மிகவும் முக்கியம் என்பதை காட்டுவதற்கு சாத்தியமான எல்லா வழிகளையும் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து