இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சபை கட்டிடத்திற்கு வெளியே அல்லது பொதுவாக மற்ற விசுவாசிகளுடன் ஆவிக்குரிய கூட்டங்களில் நீங்கள் கடைசியாக எப்போது தேவனைப் புகழ்ந்து பாடினீர்கள்? ஏன் பரிசுத்த வேதத்தில் உள்ள சங்கீத புஸ்தகத்தை திறந்து, நன்றிகளையும், ஸ்தோத்திரங்களையும் பிரதிபலிக்கும் பல வசனங்களைக் கண்டுபிடித்து அவைகளை கொண்டு உங்கள் தனிப்பட்ட துதியையும் ஸ்தோத்திரத்தையும் தேவனுக்கு ஏன் செலுத்தக்கூடாது ? பிறகு, அவற்றைக் கொண்டு உங்கள் சொந்த ராகத்தில் ஒரு பாடலைக் உருவாக்கலாமே ! உங்கள் ஆவிக்குரிய ஈவு நல்ல வார்த்தைகளா அல்லது நல்ல ராகத்தில் உள்ள பாடலா என்பதை குறித்து தேவன் எப்பொழுதும் கவலைப்படுவதில்லை; உங்கள் துதிகளையும் நன்றியையும் அவருடன் பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் இருதயம் மகிழ்ந்து களிக்கூர்ந்து, சந்தோஷத்துடனும் இருக்கிறதா என்பதை மாத்திரமே பார்க்கிறார் இன்னுமாய் அப்படி பாடும்போது அவர் அதை கேட்டுக் கொண்டிருக்கிறார் . இன்றைக்கு நம் வசனம் கட்டளையிடுவதைச் சொல்வதிலும் செய்வதிலும் இணைவோம்: "நான் தேவனின் நாமத்தைப் பாடலில் துதிப்பேன், நன்றியுடன் அவரை மகிமைப்படுத்துவேன்."

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே , மகிமையான மற்றும் பரிபூரணமான ஈவுகளை வழங்குபவரே , எனது நன்றியையும், ஸ்தோத்திரங்களையும் வெறும் விசேஷ நாட்கள் மற்றும் சிறப்பு இடங்களுக்கு மாற்றியதற்காக அடியேனை மன்னித்தருளும் . நன்மையைக் கொண்டாடவும், உம் சிருஷ்ப்பு யாவற்றையும் கண்டு மகிழ்ச்சியடையவும், துதியையும் மற்றும் நன்றியையும் தெரிவிக்கும் திறன் கொண்ட உம் மாம்ச பிள்ளைகளை உருவாக்கியதற்காக நான் உம்மைப் போற்றுகிறேன். எங்கள் அப்பா பிதாவும் சிருஷ்டிகருமான உமக்கு நன்றி செலுத்துவதற்கு எங்கள் உலகத்திலே அநேக காரணங்கள் நிறைந்ததாக மாற்றியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி. நீர் தொடர்ந்து என்னை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பும்போது, ​​​​என் இருதயம் துதி பாடல்களாலும் நன்றியுள்ள வார்த்தைகளாலும் நிரம்பி வழியட்டும். உம்முடைய மகிமைக்காக, இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே , உம்மை ஸ்தோத்தரித்து நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து