இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரட்சிப்புக்கான நமது அழுகையின் கூக்குரலை மாத்திரம் தேவனானவர் கேட்பதில்லை;மாறாக அவர் நமக்கு வல்லமை நிறைந்த மீட்பர்களையும் அனுப்புகிறார்! எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களின் வேண்டுதல்களுக்கு மாறுத்திரமாக பரலோகத்தின் தேவன் மோசேயைக் கொண்டு அவர்களை விடுதலையாக்கும்படி அனுப்பினார். (யாத்திராகமம் 3:1-9). பெலிஸ்தியர்களால் தேவனுடைய மனுஷர்களை நிந்தித்த கோலியாத்திற்கு பதிற்செய்யும்படி யெகோவா தேவன் தாவீதை அனுப்பினார் .(1சாமுவேல் 17:1-50). இருளின் மேல் அதிகாரம் படைத்த ஆகாயத்து பிரபுவாகிய சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக தம்முடைய மக்களின் விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வல்லமையுள்ள தேவன் தம்முடைய நேச குமாரனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார் (யோவான் 3:16-17; ரோமர் 5:6-11). தேவன் தமது புதிய மீட்பின் ராஜ்யத்தை அன்பின் மீது கட்டினார் - நமக்காக இயேசுவானவர் மரணத்தை ஜெயித்ததுமல்லாமல் , நம்மை விடுவிப்பதன் மூலமாக நமக்கு "ஜீவனையும், அழியாத தன்மையையும்" கொண்டு வந்தது இரட்சகரின் மாபெரிதான அன்பு. இயேசுவானவர் நம்மை மீட்பவர் மாத்திரமல்ல (பாவம், மரணம், சாத்தான் மற்றும் நரகத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுபவர்), அவர் நம்முடைய இரட்சகரும் ஆவார் (ஏதேனும் ஒன்றிற்காக நம்மைக் காப்பாற்றுபவர் - இயேசுவின் அன்பையும் கிருபையையும் கொண்டு மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்காக) ( எபேசியர் 2:1-10). தேவன் நம்மை இருளின்அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி வெளிச்சத்திற்கும் மற்றும் மரணத்தினின்று ஜீவனுள்ளோர்களாய் , தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கும் உட்படுத்தினவருமாயிருக்கிறார் !

என்னுடைய ஜெபம்

அன்பும்,நித்தியமுமுள்ள தேவனே , இயேசுவின் மூலமாய் , நீர் எனது வரையறுக்கப்பட்ட மற்றும் அழிந்துப்போகிற உலகத்திலே வந்து , மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து எங்களை மீட்டீர். என் மீதான மரணத்தின் பிடியை தகர்த்து , பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும் என்னை விடுவித்ததற்காக உமக்கு நன்றி. உம்மிடமிருந்து என்னைத் தடுத்து நிறுத்திய தடைகளைத் தகர்க்க அன்பைப் பயன்படுத்தியதற்காக நன்றி. தேவன் "இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். " அதற்காக மறுபடியுமாய் நன்றி செலுத்துகிறோம் , நீர் நேசிக்கிறவர், எங்களைக் காப்பாற்றுபவர்! இயேசுவின் நாமத்தினாலே என் நன்றியையும், ஊழியத்தையும், துதிகளையும் ஒப்புவிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து