இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் யாவரும் வெளிச்சத்திலே நடக்கிறீர்களா, அல்லது இருளில் தடுமாறுகிறீர்களா? உங்கள் பாதையை உங்களால் பார்க்க முடியுமா அல்லது நிச்சயமற்ற பாதையில் நீங்கள் திசைதிருப்பப்படுகிறீர்களா? நாம் தைரியமாக அவரை பின்பற்ற வேண்டும் என்று இயேசுவானவர் விரும்புகிறார். நம்முடைய பாதை எப்பொழுதும் எளிதாக இருக்காது, ஆனால் நாம் கடைசியாக சேருமிடம் உறுதி. எல்லாவற்றிற்கும் மேலாக, இரவில் நீங்கள் எப்போதும் ஒரு நிலாவின் வெளிச்சத்தை நாட வேண்டியதில்லை - ஏனென்றால் ஆழமான இருளில் கூட, இயேசுவானவர் உங்களுக்கு வெளிச்சமாக இருப்பார் என்று உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது , ஆகவே ஜீவனை கொடுக்கும் ஒரே ஒளி ஆண்டவராகியே இயேசு கிறிஸ்துவே .

என்னுடைய ஜெபம்

அற்புதமும்,இரக்கமுமுள்ள நல்மேய்ப்பரே, தயவுக்கூர்ந்து எனக்கு உண்மையுள்ள இருதயத்தைத் தாரும் . இருள் மற்றும் விரக்தியின் ஆழமான தருணங்களில் கூட, நான் உம்மை என் மெய்யான ஜீவ ஒளியாகக் கண்டுபிடித்து உம்முடைய வாழ்க்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எவ்வளவேணும் இருள் இல்லாதவரும் , உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிற இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து