இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லோரும் ஒரு நாள் என்ன செய்வார்களோ அதையே நானும் ஒவ்வொரு நாளும் செய்கிறேன் என்ற உண்மையை நான் நேசிக்கிறேன் : இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்போம். எதிர்ப்பு , மறுப்பு, வீணாய் செலவழித்த வாழ்க்கையின் இறுதியில் உள்ள பயத்தை விட கிருபையால் அந்த செய்தியை பறைசாற்றுவது எவ்வளவு அற்புதமானது.

என்னுடைய ஜெபம்

பிதாவே , இயேசுவைப் பற்றிய சத்தியத்திற்காக நான் உம்மை துதிக்கிறேன்.அது ஒரு நாள் என்றென்றும் வாழும் அனைவராலும் முழுமையாக உணரப்படும்.இன்று நான் ஜனங்களை நடத்தும் விதத்தில் என் வாழ்க்கை உம்முடைய சத்தியத்தை வெளிப்படுத்தட்டும். இன்றைக்கு மற்றவர்கள் இயேசுவை ஆண்டவராக அறியும்படி என் உதடுகள் அந்த சத்தியத்தை பறைசாற்றட்டும். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே.ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து