இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனிடமிருந்து இரட்சிப்பு வருகிறது. எனவே அவருடைய விலையேறப்பெற்ற மற்றும் மிகப்பெரிய ஆசீர்வாதங்களை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.ஆனால், அவர் தம்முடைய ஜனத்தின்மேல் மாபெரிதான ஆசீர்வாதமாகிய , தம்முடைய ஈவாகிய நேச குமாரனையும் முன்னமே கொடுத்திருக்கிறார். இப்போதும் நாம் அந்த ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொண்டு பாராட்ட மட்டுமே முடியும் .

என்னுடைய ஜெபம்

தேவனே , இயேசுவின் மூலமாய் நீர் எனக்கு அருளின இரட்சிப்புக்காக உமக்கு நன்றி. இந்த ஆசீர்வாதத்தை மற்றவர்களுக்குப் பரப்ப என்னைப் பயன்படுத்துங்கள், இதனால் எனக்குத் தெரிந்த மற்றும் நேசிக்கும் மக்கள் உமது குமாரனை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் அறிந்து கொள்வார்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து