இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்னும் சில பரிசுத்த வேத வார்த்தைகள் தேவனுடைய வேலைக்காரர்களாகிய —ஊழியர்கள், போதகர்கள், மூப்பர்கள்— ஆகியவர்கள் மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய முற்படும்போது அந்த வார்த்தை அவர்களுக்கு அதிக கஷ்டத்தை உண்டாக்கினது . இந்த வார்த்தை திருமணத்திற்கு மாத்திரம் பொருந்தாது என்றாலும், ஒரு விசுவாசி அவ்விசுவாசியை திருமணம் செய்வது பற்றி சிந்திக்கும் போது இது ஒரு எச்சரிக்கையூட்டும் வார்த்தையாக நிச்சயமாக அமையும் . ஆகவே கிறிஸ்துவுக்குள் நம்முடைய ஆழமான விசுவாச மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளாதவர்களுடன் (அவ்விசுவாசி) வாழ்நாள் முழுவதும் திருமண பந்தத்தை மேற்கொள்ளும்போது,அது ​​நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை விளைவித்து, எதிர்காலத்தில் நமது உறவுகளின் மீது தவறான புரிதல்களையும் சுமைகளையும் கொண்டுவரும் என்பது பரிசுத்த ஆவியினால் தூண்டப்பட்ட வார்த்தையின் நினைப்பூட்டலாகும். தேவனின் நியாயப்பிரமாண சட்டம் இஸ்ரவேலர்களை கழுதையையும் மாட்டையும் ஒன்றாக இணைக்க அனுமதிக்காதது , அது இறுதியில் அவை இரண்டையும் பிரித்துவிடும் என்பதால், கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான உறவுகளுக்கும் இதே கொள்கை மெய் என்பதை பவுலானவர் நினைப்பூட்டுகிறார்.

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே , உம்முடைய விருப்பம் சீரற்றது அல்ல என்பதை நான் அறிவேன். எனக்கு எது சிறந்ததாய் இருக்குமோ அதை நீர் விரும்புகிறீர் என்பது எனக்கு நன்றாய் தெரியும். எனவே நான் கூட்டணி அமைக்கும்போதும் மற்றும் நெருங்கிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது தயவுசெய்து எனக்கு ஞானத்தை தாரும் . உமக்காக வாழ ஒருவருக்கொருவர் உதவ விசுவாசிகளாகிய எங்களுக்கு பெலன் தாரும் மற்றும் விசுவாசிகள் அல்லாதவர்களுடன் உம் ஆசீர்வாதங்களையும் கிருபையையும் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு உதவிச் செய்யும் . உம்மையும் , உம் கிருபையையும், உம் இரட்சிப்பையும் இன்னும் முழுமையாக அறிந்துகொள்ள மற்றவர்களை ஊக்கப்படுத்த எங்களைப் பயன்படுத்தியருளும் , மேலும் அவர்களுடன் நீடித்த மற்றும் குறிப்பிடத்தக்க உறவுகளில் நுழைவதற்கு முன்பு அவ்வாறு செய்ய எங்களுக்கு வேண்டிய தைரியத்தை தாரும். இவை யாவற்றையும் இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து