இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு தேவனுடைய வார்த்தை. இது ஒரு புத்தகத்தில் உள்ள வார்த்தையோ அல்லது ஒரு தரிசனத்தில் கொடுக்கப்பட்டதோ அல்லது ஒரு சிலருக்கு மட்டுமே மலையில் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையோ அல்ல. தேவனுடைய வார்த்தை எலும்புடனும்,இரத்தத்துடனும் மாம்சத்திலே வெளிப்பட்டார். தேவனுடைய வார்த்தை வந்து நம்மோடு வாசம் பண்ணினார்; அவர் நம்மைப்போல கஷ்டங்களை எதிர்கொண்டார், அவருடைய கால்விரல்களுக்கு இடையில் அழுக்குகளைப் பெற்றார், ஏமாற்றங்களை உணர்ந்தார், சோதனைகளுடன் போராடினார், துரோகத்தை அனுபவித்தார், எங்களுக்காக அவருடைய சரீரத்தில் இரத்தம் கசிந்தது. இன்னும் நம் உலகில் வாழும்போது தேவனுடைய வார்த்தையானது நமக்காக சத்தியத்தை விட அதிகமாய் கொண்டு வந்தது; தேவனுடைய கிருபையால் நம்மை மரணத்திலிருந்து விடுவித்தார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உமது தீர்க்கதரிசிகள் மூலமாய் கடந்த காலத்தில் பேசியதற்காக நன்றி. உமது வேதத்தை எங்களுக்குத் தரும்படி தேவ மனிதர்களைத் தூண்டியதற்காக நன்றி. பரிசுத்த ஆவியின் உறுதியளிக்கும் கிரியையின் மூலமாய் இன்று உமது வார்த்தையின் பிரகடனத்தை வல்லமையுள்ளதாக்கியதற்கு நன்றி. இந்த ஒவ்வொரு பகுதியிலும் உம் சத்தியத்தை நான் கேட்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, பிதாவே, உம் தெளிவான, ஆழமான மற்றும் அணுகக்கூடிய வார்த்தையை இயேசுவின் மூலம் பேசியதற்காக நான் உம்மை துதிக்கிறேன் . இயேசுவின் நிமித்தம், நீர் என்னை நேசிக்கிறீர் என்பதையும் , பரிசுத்தப் படுத்தியுள்ளீர் என்பதையும் நான் அறிவேன், மேலும் நான் உம்முடன் பரலோக ராஜ்யத்தை பகிர்ந்து கொள்வேன் என்றும் அறிந்திருக்கிறேன் . என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உமக்கு நன்றிகளை செலுத்தி, என்னுடைய நன்றியறிதலை நான் வாழ்கிற வாழ்க்கையின் பண்பு மற்றும் குணாதிசயத்தின் மூலமாய் காண்பிக்க விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே, ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து