இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய சித்தத்திற்கு மரியாள் தன்னை ஒப்புக்கொடுத்து , இயேசுவானவர் ஜனங்களுடைய இருதயத்திலே வந்து ஜீவிக்க மரியாள் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வழிகளிள் ஒரு பெரிய விலையைக்கொடுத்தாள், அந்த இரவிலே அதிசயமும், இரகசியமும் உண்டானது அப்பொழுது அவளுடைய அணுகுமுறை இருந்ததைப் போலவே நம்முடைய அணுகுமுறையும் இருக்க வேண்டும். நாமும் கர்த்தருடைய ஊழியக்காரராக இருப்பதற்கும், நம்முடைய வாழ்க்கை மற்றும் உதடுகளின் துதியை அவருக்கு வழங்குவதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும். இயேசுவின் மூலமாய் , தேவன் நமக்காக பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்!

என்னுடைய ஜெபம்

மகத்துவமுள்ள பிதாவே, சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் எனக்காக அற்புதமான காரியங்களை நடப்பித்தீர் . நீர் அடியேனை பாவத்திலிருந்து காப்பாற்றினீர், என்னுடைய கலகத்திற்கான விலையை நீர் கொடுத்தீர் , மேலும் எனக்கு பரலோகத்தையும் ,பரிசுத்த ஆவியையும் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர் . நான் கற்பனை செய்வதை விட நீர் மகா பெரியவர், உம்முடைய மகிமை ஒப்பிடமுடியாதது, ஆனால் அடியேனை சேர்த்துக்கொள்ளும்படியாய் நீர் உம்முடைய நேச குமாரனை மிகவும் தாழ்த்தினீர் , பின்னர் உம்முடைய கிருபையை கொண்டு என்னை உம்முடன் மறுபடியுமாய் எழுப்பினீர். நான் உமக்கு ஒருபோதும் முழுமையாக நன்றி சொல்ல முடியாது, ஏனென்றால் என் வாயின் வார்த்தைகள் போதுமானவைகள் அல்ல, அடியேன் ஆயிரம் வருடம் வாழும் வாழ்க்கையினால் உமக்கு திருப்பிச் செலுத்துவதை விட நீர் எனக்கு மிகவும் அற்புதமானவர். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே நான் உங்களுக்கு எல்லா மகிமையையும் புகழ்ச்சியையும் செலுத்துகிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து