இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தருடைய நாமத்தினாலே தொழுதுகொள்ளுகிறவனெவனோ ! அவன் அவரை உயிர்த்தெழுந்த ஆண்டவராக அறிவிக்கவும்! முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்தது போல நீங்களும் ஞானஸ்நானத்தின் மூலமாய் அவரோடு பங்கடையுங்கள். அவருடைய பரிசுத்த ஜனங்களோடு தேவன் உங்களை இணைத்தாரா. நம் உலகத்தையும், நம்மையும், வாதிக்கிற கேட்டிலிருந்து நம்மை இரட்சிக்கிறவர் இயேசுவானார் என்று அறிந்துகொள்ளுங்கள். தேவன் இயேசுவானவரை நம்மை இரட்சிக்கவும், மீட்கவும், நிலை நிறுத்தவும் இன்னுமாய் ஆசீர்வதிக்கவும் இவ்வுலகத்திற்கு அனுப்பினார். அந்த இரட்சிப்பின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளுங்கள். காலம் தாழ்த்தாதிருங்கள் ! இன்றே இரட்சண்ய நாள்! இதிலே பங்கடையுங்கள். இதிலே மகிழ்ந்து களிகூறுங்கள். இதை பகிர்ந்துக்கொள்ளுங்கள். நம்முடைய ராஜாவாகிய கிறிஸ்து அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவர வந்திருக்கிறார்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் பாவங்களுக்காக மரிக்க இயேசுவை முதல்முறையாக அனுப்பியதற்கு நன்றி! என்னை ஆறுதல்படுத்தவும், பலப்படுத்தவும், என் வாழ்க்கையில் பாடுபடவும் இயேசுவை என் இதயத்தில் அனுப்பியதற்கு நன்றி! என் இரட்சிப்புக்கு எல்லாவற்றிற்கும் மேலாக நன்றி. இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து