இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வசனம் நமக்கு கூறும் அனைத்தையும் கவனித்து பாருங்கள்.வாக்குதத்தத்தின்படி இயேசுவானவர் தாவீதின் வம்சத்திலே நித்திய இராஜாவாக வந்தார். எல்லா ஜனங்களின் இரட்சகரும் அவரே. இஸ்ரவேலருக்கு வாக்குதத்த நம்பிக்கையின் மேசியாவும் , கிறிஸ்துவும் அவரே. அவர் ஆண்டவரும், எல்லா சிருஷ்டிப்பையும் ஆளுகிறவர், நம்முடைய வாழ்க்கையின் அதிபதியும் அவரே. உண்மையான கேள்வி என்னவென்றால், இயேசுவானவர் இன்று நமக்கு முன் குறிப்பிட்ட அந்த எல்லாமாயும் இருக்கிறார் என்று நாம் முடிவு செய்திருக்கிறோமா என்பதுதான். இன்று அவர் உங்கள் இரட்சகராக இல்லை என்றால், ஏன் அவரை ஏற்றுக்கொள்ளக்கூடாது? அவர் அப்படி இருந்தால், அவருடைய கிருபையை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?

என்னுடைய ஜெபம்

பிதாவே , இயேசுவை என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் என்னிடம் அனுப்பியதற்காக நான் உம்மைப் போற்றுகிறேன். உம்முடைய கிருபையையும் சத்தியத்தையும், நேசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவுங்கள். நான் இயேசுவின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ள விரும்பும் பின்வரும் நபர்களை தயவாய் நீர் ஆசீர்வதிக்கும்படி கேட்கிறேன் ... விலையேறபெற்ற இரட்சகரின் நாமத்தினாலே , அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து