இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய நற்செய்தி , இந்த வார்த்தையானது , ஒரு புத்தகம், ஒரு தீர்க்கதரிசனம் அல்லது ஒரு சுருள் ஆகியவற்றில் மட்டும் நின்றுவிடவில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம்! தேவனுடைய செய்தி, அவருடைய மேன்மையான வார்த்தையானது மாம்சம் , இரத்தம் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டது ! சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ! தேவனுடைய நற்செய்தி , அந்த வார்த்தை மாம்சமானதினால் , அவர் நமக்கு தூரமாய் இருக்கவில்லை அல்லது அவரை கிட்டி சேர முடியாமல் போகவில்லை . இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள், ஏனென்றால் தேவனுடைய நற்செய்தி, அந்த வார்த்தை நமக்காக அனுப்பப்பட்டது, "கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் " இயேசுவானவர் வந்தார் . இந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார் ". அதினால் நமக்கு அன்பு, நம்பிக்கை, மீட்பு, இரக்கம், இரட்சிப்பு, மகிழ்ச்சி மற்றும் இன்னும் பலவற்றைக் கொண்டு வந்தது ! தேவனுடைய வார்த்தையாகிய இயேசு, "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்"!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , எல்லா நாமத்துக்கும் மேலாக உம் நாமத்தைப் போற்றி உயர்த்துகிறேன். உம் அன்பு எல்லா கடல்களின் ஆழங்களை பார்க்கிலும் மிக ஆழமானது . உம் இரக்கம் இந்த உலகத்தின் அகலத்தை விட மிக பெரியது . உம் கிருபை ஆராய்ந்து முடியாதது. உம் இரட்சிப்பு ஒப்பிட முடியாத அளவுக்கு அற்புதமானது. நாங்கள் ஜீவிக்கிற உலகத்திலே வந்து வாழ்ந்த உம் வார்த்தையாகிய இயேசுவின் மூலமாய் இவை யாவற்றையும் கொடுத்து என்னை ஆசீர்வதித்ததற்காக உமக்கு நன்றி. மாம்சமாகிய உம்முடைய வார்த்தையாகிய கர்த்தராகிய கிறிஸ்துவின் நாமத்தினாலே உம்மைத் துதித்து, ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து