இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் இயேசுவுக்குள் நம்மை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார். அவருடைய கிருபையையும், இரக்கத்தையும், மன்னிப்பையும், ஆவியையும், அதிகாரத்தையும், ஐக்கியத்தையும் , வார்த்தையையும் நமக்குக் கொடுத்து, நம்மைத் தன் குடும்பத்தில் சுவிகார புத்திரராகும்படி செய்தார் . ஆச்சரியப்படும் விதமாக, தேவன் முன்னமே நம்மை ஆசீர்வதித்ததை விட இன்னும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஏன்? 1.அவர் ஒரு உதாரத்துவமான தேவன். 2.அவர் நம் அன்பான தகப்பன் . 3.அவரைப் போலவே நாமும் உதாரத்துவமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 4. நாம் மற்றவர்களை ஆசீர்வதிப்பதைப் பார்க்க அவர் விரும்புகிறார் , அதனால் அவர் நாம் இன்னும் அதிகமாக பகிர்ந்து கொள்ள நம்மை ஆசீர்வதிப்பார். மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காகவே தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார் !

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னை உசிதமான நன்மையினால் ஆசீர்வதித்துள்ளீர், எனவே மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்கான ஒவ்வொரு நாளும் நீர் உருவாக்கும் வாய்ப்புகளைப் பார்க்க என் கண்களை திறந்தருளும் . உம் ஆசீர்வாதங்களுக்கு அடியேன் ஒரு வழியாய் இருக்கும்படி செய்யுங்கள் . நான் உம் பிள்ளையாக இருப்பதற்காக எல்லாவற்றையும் கொடுத்த என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இதை ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து