இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மேய்ப்பர்கள் அந்த இரவில் தங்களுக்குச் சொல்லப்பட்டதை கேட்டு , கண்ட பிற்பாடு தங்கள் மந்தைக்கு திரும்பினதை நினைத்து பார்க்க கூடுமா? அவர்கள் தேவனுடைய மகிமையை கண்டார்கள். அவர்கள் தேவதூதர்களின் பிரசன்னத்தை அனுபவித்தார்கள். அவர்கள் புதிதாகப் பிறந்த ராஜாவையும், வாக்குதத்தம்பண்ணப்பட்ட மேசியாவையும், உலக இரட்சகரையும் கண்டார்கள். அவர்கள் சொன்னது போலவே ஆச்சரியமாக இருந்தது. தேவதூதர் கூறின வார்த்தைகள் எவ்வளவு ஆச்சரியமாக இருந்ததோ, அவைகள் மகிமையாய் நிறைவேறின. ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பும் , தேவனுடைய மாபெரிதான வாக்குறுதியும் உத்திரவாதத்தின் வெளிப்பாடாய் இருக்கிறது. அவர் சொல்லிய வார்த்தையை நிறைவேற்றுவார், வாக்குமாறாதவர். நம்பமுடியாத அளவிற்கு, தேவன் நமக்குப் பெயரிடப்படாத மற்றும் அவர்களின் உடன் வேளையாட்களுக்கு முக்கியமில்லாத மேய்ப்பர்களை, தேவனின் மகிமையான இரட்சிப்பின் சாட்சிகளாகவும் பங்கேற்பாளர்களாகவும் தேர்ந்தெடுத்தார். நாம் யாராக இருந்தாலும், இயேசுவானவர் நமக்காக வந்தார் என்பதை நினைவூட்டுவது நம் பிதாவின் சித்தமாகும் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உம்முடைய மகிமையை அனுபவித்த அந்த மேய்ப்பர்களுக்கு எப்படி இருந்தது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இருப்பினும், அன்பான பிதாவே , இயேசு எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். என்னை நேசிப்பதற்காகவும், உமது கிருபையினால் என் இருதயத்தை அடைந்ததற்காகவும் நான் உம்மைப் போற்றுகிறேன். நீர் எனக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றியுடன் என் வாழ்க்கையை வாழ முற்படுகையில், என்னைப் பரிசுத்தப்படுத்தி, உமது பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலமாய் என்னை நீதிமானாக்குங்கள். இயேசுவின் மகிமையான நாமத்திலே ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து