இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு பெரிய ஆச்சரியம்! நாம் அப்படித்தான் இருக்கிறோம்! ( பார்க்க யோவான் 3:1-3) நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். நம்முடைய பிதாவானவர் இந்த பிரபஞ்சத்தை அதன் கோடிக்கணக்கான கோள்களுடன் சிருஷ்டித்தார். நம்முடைய பிதா ஒவ்வொரு தினமும் புதியதோர் சூரிய அஸ்தமனத்தை வனைந்து ஒவ்வொரு காலையிலும் இருளை விரட்டுகிறார். நம் பிதா நம்மை நேசிப்பது மட்டுமல்லாமல், தமக்குச் சொந்தமானவர் என்று கூறி, நம்மைத் தம்முடைய நித்திய வீட்டிற்கு அழைத்தும் செல்கிறார். ஏன்? ஏனென்றால் நாம் அவருடைய நற்செய்தியை இயேசுவின் மூலமாய் கேட்டோம். ஏனெனில் அவருடைய கிருபையை அவருடைய குமாரனில் பெற்றோம். நம்பமுடியாதது! மகிமையானது ! கிருபை!

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , இயேசுவின் மூலமாய் என்னை உம்முடைய பிள்ளையாகக் கூறியதற்காக உமக்கு நன்றி, அவருடைய நாமத்தினாலே அடியேன் உம்மை துதித்து நன்றி செலுத்துகிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து