இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அடுத்த சில நாட்களிலோ, மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ என்ன நேரந்தாலும் அதற்கு முன்னமே தேவன் இருக்கிறார் என்பது ஆறுதல் அல்லவா? அவர் இடத்திற்கும் காலத்திற்கும் உட்பட்டவர் அல்ல . அவர் தமது வார்த்தையின் வல்லமையினால் யாவற்றையும் நிஜமாக உருவாக்கியவர் . ஒன்றும் அறியாத காரணத்தால் சிலர் பயத்தில் நடுங்கினாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் எங்கிருந்தாலும்,எந்த சூழ்நிலையில் , பரலோகத்திலுள்ள நம் பிதா - நானே மிக பெரியவர் என்றவர், இருந்தவரும் இருக்கிறவரும் வரப்போகிறவரும் - முன்னமே இருக்கிறார் என்பதை அறிந்து ஆறுதல் அடையலாம். அவர் நம்முடைய மீட்புக்காக மற்றும் இரட்சிப்புக்காக முன்னமே கிரியை நடப்பித்து கொண்டிருக்கிறார். இப்போதும், நம் எதிர்காலத்தைப் குறித்து நம்மால் காண முடியாத புதிய விஷயங்களை அவர் நமக்கு அறிவித்து வருகிறார். எனவே, நம் அறியப்படாத எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்கும்போது, ​​காலத்தை கடந்தவருடன் பயணிப்பதை உறுதி செய்வோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே ஸ்தோத்திரம் ! என் வாழ்க்கையும் என் உலகமும் எங்கு செல்கிறது என்பது உமக்குத் தெரியும். வருடத்தின் மாற்றம் மற்றும் காலப்போக்கில் மிகவும் குழப்பமான நிலையில், எனது எதிர்காலம் உம் கரங்களில் இருப்பதாக நான் உணர்வுபூர்வமாகவும் நம்பிக்கையுடனும் விசுவாசிக்கிறேன் . எனது எதிர்காலம் வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை ! உம் எதிர்காலம் எனக்கு முன்னால் வெளிவரும்போது, ​​தயவுசெய்து என்னை நம்பிக்கையுடன் ஆசீர்வதித்து, என் இருதயத்திலிருந்து கவலையை எடுத்துப்போடும் . எல்லாப் கனமும் உம் ஒருவருக்கே உரியது! சர்வ வல்ல தேவனாகிய ஆண்டவரே! இயேசுவின் நாமத்தில் நான் உம்மைப் போற்றி நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து