இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் பூமிக்குரியவர்கள் . ஆம், நாம் அதை விட அதிக விசேஷித்தவர்கள் ஆனால் சில நேரங்களில், நம் வாழ்வில் இந்த தருணத்தில் நமது பூமிக்குரிய ஜீவியத்தை பற்றி நினைவுப் படுத்த வேண்டும்! காலத்திற்கு முன்னே , காலத்தை கடந்து அல்லது காலங்களுக்கு மேலே இருப்பதை மெய்யாகவே நம்மால் புரிந்து கொள்ள முடியாது. நாம் அறிந்தபடி, காலங்கள் உருவாகுவதற்கு முன்பே, தேவனானவர் இருந்தார் - அவர் தன்னை "நானே " என்று வெளிப்படுத்தினார், இருந்தவர், இருப்பவர் மற்றும் வரப்போகிறவர். நாம் வாழ்வதற்கு அடிப்படையான காரியங்கள் ஒரு சீராய் இப்பிரபஞ்சம் இருப்பதற்கு முன்பு, தேவன் "நானே" - கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் ஒரே நேரத்தில் இருப்பவர் ! நமக்காக சிறுஷ்டிக்கப்பட்ட உலகம் மற்றும் காலங்களும் மற்றும் வேலைகளும் உருவாகும் முன்னும், அதற்கு அப்பாலும், அவர் இருந்தார். இதை நாம் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் ஒவ்வொரு புதிய தொடக்கமும் - அது ஒரு நாளாக இருந்தாலும், ஒரு வாரமாக இருந்தாலும், ஒரு வருடமாக இருந்தாலும் அல்லது ஒரு நூற்றாண்டாக இருந்தாலும் - தேவனிடம் இருந்து தொடங்க வேண்டும். அவர் மட்டுமே தொடக்கத்தின் மையமாக இருப்பவர் , ஒவ்வொரு புதிய தொடக்கத்திலும் இருப்பவர் "நானே ".

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகரும், பிரபஞ்சத்தின் தேவனுமான, உம்முடைய ஒப்பற்ற வல்லமை மற்றும் புரிந்துகொள்ள முடியாத மகிமைக்காக நான் உம்மைப் போற்றுகிறேன். இந்த புதிய ஆண்டை நான் தொடங்கும் போது, ​​எனது எதிர்காலம் உமது சித்தத்திலும், கிருபையிலும், இரட்சிப்பிலும் தங்கியுள்ளது என்பதை நான் அறிவேன். இந்தப் புதிய எதிர்காலத்தை நோக்கி நான் பயணிக்கும்போது தயவுசெய்து என்னுடனே வாரும் . இன்றும், இந்த ஆண்டும், இன்னுமாய் நீர் எனக்கு பூமிக்குரிய வாழ்க்கையைத் கொடுக்கும் நாட்கள் வரையில் என்னில் மகிமைப்படும்படி கேட்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே தாழ்மையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து