இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆயத்தப்படு. தயாராய் இரு. ஓடு !" இன்று நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்து அவைகளை செய்ய ஒப்புக்கொடுக்க , சிறுவயதில் இருந்தே இந்த வார்த்தைகள் நமக்கு மிகவும் அவசியமானவை . நாம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று தேவனானவர் விரும்புகிறார். ஆனால், தேவனை மகிமைப்படுத்த நாம் கையிட்டு செய்யும் எல்லா செயல்களிலும் நம்மை முழுவதுமாக தாழ்த்தி ஒப்புக்கொடுக்காமல் இருந்தால், இவ்வுலகில் உள்ள எல்லா தனிப்பட்ட ஆயத்தங்களிலிருந்தும் இந்த காரியம் எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அடுத்த வருஷம் இதற்காக என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்? நாளை இதற்காக என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்? இன்று இதற்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? நாங்கள் "ஆயத்தமாய் இரு " மற்றும் "ஓடு " இந்த காரியங்களுக்கு முன்னதாக, முதலாவது தேவனுக்கும் அவருடைய திருபணிக்கும் நம்மை முழுவதுமாய் ஒப்புவித்து ஆயத்தமாகுவோம் !

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள பிதாவே , என்னுடைய சொந்த திட்டங்களும், என்னுடைய வழிகளும், உம்முடைய திட்டங்களோ அல்லது உம் வழிகளாகவோ ​​இருக்க அவசியமில்லை என்பதை நான் அறிவேன். வேதாகமத்தை வாசிப்பதற்கும் உமது விருப்பத்திற்கு செவிசாய்ப்பதற்கும் நான் என்னை அர்ப்பணித்துக்கொள்ள எனக்கு உதவுங்கள். நான் செய்யும் எல்லாவற்றிலும் உம்மைக் கனப்படுத்தவும் , மகிமைப்படுத்தவும் , போற்றவும், துதிக்கவும் , என்னுடைய எல்லா முயற்சிகளையும் அடியேனை முழுமையாக ஒப்புவிக்க விரும்புகிறேன். என் இரட்சகரும் ஆண்டவருமான இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து