இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மில் பலர் நம் சூழ்நிலைகள் நம் மனநிலையை தீர்மானிக்க அனுமதிப்பது எளிது. பவுல் தெசலோனிக்காவில் உள்ள புதிய கிறிஸ்தவர்களின் ஒரு குழுவினருக்கு உரையாற்றுகிறார், அவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் தொடக்கத்திலிருந்தே தாக்குதலுக்கு உள்ளானார்கள் (அப்போஸ்தலர் 17:5-9). ஆயினும்கூட, பவுலானவர் இந்த விசுவாசிகளுக்கு கிறிஸ்துவுக்குள் அவர்களின் புதிய வாழ்க்கை அவர்களின் உலகப்பிரகாரமாக கடுமையான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் உள்ளான மனுஷனில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது என்பதை நினைப்பூட்டினார். அவர்களின் மகிழ்ச்சி ஒரு விரைவாய் கடந்து போகக்கூடிய அல்லது சூழ்நிலை-நிர்ணயிக்கப்பட்ட ஒரு பொய்யான வெளித்தோற்றம் அல்ல. மாறாக, "மிகுந்த உபத்திரவத்திலே" இருந்தபோதிலும், அவர்கள் இரட்சிப்பின் வல்லமை வாய்ந்த செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர் . அவர்களுடைய மகிழ்ச்சி பூமிக்குரிய சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்ல. மாறாக, அவர்கள் தங்கள் இரட்சகரின் மாதிரியிலும், பரிசுத்த ஆவியின் மூலமாய் கொடுக்கப்பட்ட அவருடைய மாறாத பிரசன்னத்திலும், அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சிப்பிலும் தங்கள் மகிழ்ச்சியை வேரூன்றினார்கள்.

என்னுடைய ஜெபம்

அன்பான பரலோகத்தின் பிதாவே , தயவுக்கூர்ந்து என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்புற சூழ்நிலைகளில் இருந்து விடுவித்து, உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அந்த மகிழ்ச்சியை பெலப்படுத்துங்கள். எனது இரட்சகரின் மாதிரிக்கு என் வாழ்க்கையையும் மனப்பான்மையையும் நான் மாற்றிக்கொள்ள முயலும்போது தயவுக்கூர்ந்து அடியேனை ஆசீர்வதியுங்கள். என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆவிக்குரிய மகிழ்ச்சியினால் சிறந்த மாதிரியாக அடியேன் இருக்க எனக்கு உதவியருளும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து