இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒருவரை பின்பற்றுவது என்பது அவரை புகழ்ந்து போற்றுவதற்கு உண்மையான சான்றாகும். நாம் பிரியமான பிள்ளைகளைப்போல இருந்து கொண்டு உண்மையாக தேவனைப் புகழ்ந்து பேச வேண்டுமானால், அவரை பின்பற்றுவது என்பது புகழ்ந்து போற்றுவதில் விலையேறப் பெற்ற ஒன்றாகும். நீங்கள் பார்க்கிறீர்கள், தேவன் மீதான அன்பு ஒருபோதும் நம் மனதில் மாத்திரமோ அல்லது நம் இதயத்தில் மட்டும் நிகழும் ஒன்றல்ல. அன்பு என்பது நாம் மற்றவருக்குச் செய்யும் ஒன்று - அது ஒரு கிரியை . யோவான் ஆசிரியர் 1யோவான் 4-ல் நம் கிரியைகளினாலும் வார்த்தைகளினாலும் அன்பு கூற வேண்டும் என்று கூருகிறார் . அன்பு என்பது - நமது விருப்பங்களை , நமது நன்மைகளை , நமது ஆசைகளை - தேவனை மகிமைப்படுத்தவும் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவும் நம்மை விட்டுக்கொடுப்பது . இந்த வகையான அன்பு நாம் வாழும் இவ்வுலகை , அல்லது ஒரு திருமணத்தை அல்லது ஒரு குடும்பத்தை மாற்றக்கூடியது.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , நீர் எப்படி என்னை மிகவும் நேசிக்கிறீர்கள் என்பதை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது, உம்முடைய குமாரனை எனக்காக பலியாக மரிக்க கொடுத்தீர்கள் . தயவுசெய்து மற்றவர்களை தியாக மனப்பான்மையோடு நேசிக்க எனக்கு உதவிச் செய்யும். இதைச் செய்வதற்கான பெலன் எனக்குள் இல்லை என்பதை நான் அறிவேன், எனவே உம் அன்பை என் இருதயத்திலே ஊற்றி , அதினால் நான் அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். எனக்காக பலியான இயேசுவின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து