இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் தங்கள் பக்கம் இருப்பதாக ஒரு கூட்ட மக்கள் கூறுகின்றனர். உண்மையில், நாம் தேவனின் பக்கம் இருக்கிறோமா என்பதுதான் முக்கியமான கேள்வி! நாம் நினைப்பதையும் சொல்வதையும் விட நாம் என்ன தேடுகிறோம், எதை கிரியைகளினால் காண்பிக்கிறோம் என்பதன் மூலம் அது தீர்மானிக்கப்படுகிறது. தேவன் உங்களுடனே இருக்க விரும்புகிறார், அவரைப் போல இருக்க நம்மை அழைக்காத ஒரு கிருபை, அந்த ஒரு தரமற்ற கிருபையை வழங்கும்படியாய் அவர் ஒருபோதும் தன்னுடைய குணாதிசயங்களை விட்டுக்கொடுப்பதில்லை. அவர்கள் செய்யும் செயல்களினாலும், வார்த்தைகளினாலும் தங்கள் குணத்தை காண்பிக்கும் விசுவாசிகளைத் அவர் தேடுகிறார்.

என்னுடைய ஜெபம்

மகா பரிசுத்தமுள்ள தேவனே . உமது நீதியும் பரிசுத்தமும் எனக்கு மேலானவை . அவற்றை அடைவதற்காக நான் எவ்வளவு சிறப்பான முயற்சிகள் செய்தாலும் அவைகள் பிரயோஜனம் அற்ற முயற்சிகள் மட்டுமே என்பதை நான் அறிவேன்.ஆயினும்கூட, அன்பான பிதாவே , மாம்சத்தினால் எல்லா வகையிலும் உம்மைப் போலவே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் . என் வாழ்க்கையில் உம்மையும் உம் குணாதிசயத்தையும் நான் தேடும் போது உம்முடைய பிரச்சன்னம் என்னுடன் இருப்பதை எனக்குத் தெரியப்படுத்தும் . நீதியுள்ள இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து