இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் அன்புள்ளவராகவே இருப்பதால் நம்மீது அன்பு காட்டுகிறார். தேவன் நம்மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்துகிறார், ஏனென்றால் அவருடைய அன்பில்லையென்றால் நாம் ஒன்றுமில்லை என்று அவருக்குத் தெரியும். உலக மக்களுக்குத் தம் வல்லமையைக் காண்பிக்க விரும்புவதால் தேவன் நம்மீது தம்முடைய அன்பைக் காட்டுகிறார். தேவன் நம்மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்துகிறார், ஏனென்றால் இரட்சிக்க அவருடைய அற்புதமான வல்லமையை நாம் அறிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தேவன் நம்மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்துகிறார், அதனால் நாம் அவரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து கனம் பண்ணுவோம் , துதிப்போம், போற்றுவோம் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தரும் , சர்வவல்லவருமான தேவனே , உமது மகத்துவத்திற்காகவும் வல்லமைக்காகவும் நான் உம்மை துதிக்கிறேன். உமது அன்பிற்காகவும், உம் கிருபைக்காகவும் நான் உம்மைப் போற்றுகிறேன். என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியுடன் உம்மைப் போற்றுகிறேன். ஒரே மெய்யான மற்றும் ஜீவனுள்ள தேவனான உம்மை கனப்படுத்தவும், மகிமைப்படுத்தவும், என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நான் இந்த பூமியில் வாழும் வரை என் இருதயத்திலும் என் வாழ்விலும் உமக்கே கனமும், மகிமையும் செலுத்துகிறேன் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து