இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் விரும்பும் நபர்களுக்கு ஆண்டின் துவக்கம் ஒரு சோதனையான காலமாகும். உங்களுக்கோ அல்லது நீங்கள் நேசிப்பவர்களுக்கோ அப்படி இருந்திருக்கலாம்.உங்களுக்காகவும், அவர்களுக்காகவும் ஜெபிக்கிறேன், அது என்னவென்றால் ஆறுதலின் தேவனின் சமூகத்தை அவர்கள் அறிய வேண்டும் என்பதே. ஆங்கிலத்தில் பிரபலமான சிறு கவிதையான "அடிச் சுவடுகள் " அல்லது வேதாகமத்தில் பிரபலமான வாக்கியம் "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்;" நமது வேதனைகளையும், சோதனைகளையும், நெருக்கங்களிலும் எதிர்த்து நிற்க தேவனின் பிரசன்னம் முற்றிலும் இன்றியமையாதது! குறிப்பாக நாம் தனிமையாக உணரும் தருணங்களில், தேவன் நம்முடனே இருக்க விரும்புகிறார். அவர் சிலுவையிலே தன்னந்தனியாக பாடுகளையும் அவமானங்ககையும் சகித்தார் என்று நம்முடனே எடுத்துரைக்கிறார்.

என்னுடைய ஜெபம்

தேவனே , நீங்கள் பாதுகாப்பான தூரத்திலிருந்து தேவனாக இருக்க மறுத்ததற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனென்றால் நீர் இவ்வுலகத்திற்கு வந்து எப்படி கைவிடப்படுவது , துரத்தப்படுவது மற்றும் தனிமைப்படுத்தப்படுவது போன்றவற்றை உணர்ந்தீர்கள் ஆகையினாலே நீர் என்னை ஒருபோதும் கைவிடீர் என்று அறிந்து உம்மீது நம்பிக்கைக்கொள்ளுகிறேன். இன்று என் வாழ்வில் என்னுடன் நீர் இருப்பதைப் பற்றிய தெளிவான உணர்வை எனக்குத் தாரும் , அடியேன் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து