இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபிடமிருந்து இந்த ஆசீர்வாதம் வருகிறது. அவர் சோதனைகளை சகித்தார் ; அவர் அவைகளை பற்றி மாத்திரம் போதிக்கவில்லை! யாக்கோபு தனது விசுவாம் சோதிக்கப்பட்ட போது அதை "பற்றிக்கொண்டு " மற்றும் அதிலே "நிலைத்திருப்பது " பிரயோஜனம் என்று அறிந்திருந்தார் . தேவன் நம்மில் அன்புகூருகிறார் என்றும், நம் எதிர்காலத்தில் வரவிருக்கும் காரியங்களை குறித்து அவர் எண்ணி முடியாத வாக்குத்தத்தத்தை அளித்துள்ளார் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். நம்முடைய சோதனை மற்றும் உபத்திரவம் இறுதியில் பெரும் ஆசீர்வாதம், ஜெயம் மற்றும் கனமாக மாறும் என்பதை அவர் அறிந்திருந்தார். தேவன் நமக்கு ஜீவனை தந்து ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதை நாம் அறியவேண்டும் என்று யாக்கோபு விரும்புகிறார்! எல்லாவற்றிற்கும் மேலாக, ஆகையால் தான் தேவனானவர் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார் (யோவான் 10:10). எனவே, பற்றிக்கொண்டு , நிலைத்திருங்கள் ஏனென்றால் ஜீவகிரீடத்தை தேவன் உங்கள் எதிர்காலத்தில் கொடுக்க விரும்புகிறார்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள ஆண்டவரே மற்றும் பிதாவே , நான் தாக்குதலுக்கு உள்ளானபோது நீர் அடியேனை பெலப்படுத்தியதற்காகவும் , நான் சோர்வாகவும் வெளியேறத் தயாராக இருந்தபோது என்னை நிலைநிற்க செய்ததற்காக உமக்கு நன்றி. தயவு செய்து "பொறுமையோடு " என்பதை என் உள்ளத்தில் ஆழமாக எழுதி, எனக்கு உறுதியான மனப்பான்மையைத் தாரும் , அதனால் என் வாழ்க்கையின் எந்த சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் நான் உமக்கு ஊழியம் செய்வேன். நான் பொறுமையோடே காத்திருந்து அந்த வாடாத ஜீவகிரீடத்தைப் பெறுவேன் என்று நம்பிக்கையோட காத்திருக்கிறேன் . இயேசுவின் மகத்தான நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து