இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சுவாரஸ்யமாக, தேவன் நம்மை நேசிக்கிறார் என்று மாத்திரம் பரிசுத்த வேதாகமம் எப்போதும் சொல்லவில்லை. மாறாக, அது இப்படியாய் கூறுகிறது: தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.(ரோமர் - 5:8) நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான்- 4:10 ) ....அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் -3:16) தேவனை பொறுத்தவரை, அன்பு என்பது ஒரு உணர்ச்சி அல்லது நோக்கத்தை விட அதிகம். உண்மையான அன்பு - மீட்கும் அன்பு, தேவன் காண்பிக்கும் அன்பு - கிரியைகள் மற்றும் அந்த செயல்களைத் தொடங்கும் உணர்ச்சிகளால் வரையறுக்கப்படுகிறது! நமக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை இயேசு காண்பித்தார் . எங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அவர் அதைச் செய்தார். நாம் பாவிகளாகவும், சக்தியற்றவர்களாகவும், தெய்வபக்தியற்றவர்களாகவும், தேவனின் எதிரிகளாகவும் இருந்தபோதும் அவர் நம்மீது தேவனின் அன்பை வெளிப்படுத்தினார்!
என்னுடைய ஜெபம்
அப்பா, எங்களை நேசித்ததற்காக நன்றி. நீர் செய்ததற்காக நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நீர் யார் என்பதற்காக நாங்கள் உம்மை நேசிக்கிறோம். உம்முடைய வாக்குறுதிகளுக்காக நாங்கள் உம்மை நேசிக்கிறோம். உம் உண்மை தன்மைக்காக நாங்கள் உம்மை நேசிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பான பிதாவே , நீர் எங்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை எங்களுக்குக் காட்டிய இயேசுவின் காரணமாக நாங்கள் உம்மை இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம். இயேசு நமக்காகச் செய்ததைப் போல மற்றவர்களுக்குச் ஊழியம் செய்வதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் எங்கள் அன்பைக் காண்பிக்க எங்களுக்கு அதிகாரம் தாரும் . அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.