இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

போர் விமானத்தின் எஞ்சின் வெளியேற்றும் வெப்பத்தைத் தேடும் ஏவுகணை அதை பின்தொடர்வது போல நமது செயல்களும் நம் எண்ணங்களைப் பின்பற்றுகின்றன. மற்றவர் வாழ்க்கையில் எதிர்மறையானவற்றைக் மட்டுமே கண்டறிய நம்மைச் சுற்றியுள்ள பலர் நம்மைப் பயிற்றுவிக்கும் வேளையில், நாம் தீவிரமாக சிந்தித்து, தேவனுடைய குணாதிசயங்கள், தன்மைகள் மற்றும் தேவனின் தயையையும் நாம் பின்பற்ற வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் அற்புதமான தேவனே , இந்த உலகம் எனக்கு கொடுக்கக்கூடியதை விட நீர் மிகவும் அதிகமாய் என்னுடன் இருந்ததற்காக உமக்கு நன்றி. இவ்வுலகம் ஏற்றுக்கொள்வதை விட மேன்மையான ஸ்தானத்திற்கு என்னை அழைத்ததற்காக உமக்கு நன்றி. எந்த மனிதனும் கற்பனை செய்ய முடியாத சிறந்த எதிர்காலத்தை எனக்கு அளித்ததற்காக நன்றி. உம்முடன் வாழ எனக்கு ஒரு மகா மேன்மையான அழைப்பை வழங்கியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து