இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் இருக்கிறோம் என்பதை எத்தனை முறை மறந்து விடுகிறீர்கள் ? நம்முடைய எதிராளியான பிசாசானவன் தந்திரமுடையவன் - அச்சுறுத்தலின் உடனடித் தன்மையை எடுத்துப் போட்டால் , ஆபத்து நம்மை கடந்துபோய்விடும். ஆனால் அவன் எப்போதும் இருக்கிறான், அவனது திட்டங்களை யூகித்து, அவனது நகர்வுகள் அனைத்தையும் எதிர்கொள்வதற்குப் பதிலாக, தேவன் நமக்குக் கொடுத்த சர்வாயுதவர்க்கங்களை எடுத்துக் கொண்டு பொல்லாத ஆவிகளை எதிர்த்து நிற்கவேண்டுமென்று பவுலானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார் .

என்னுடைய ஜெபம்

சேனைகளின் ஆண்டவரே, என் மாபெரிதான மீட்பரே, உமது வல்லமையால் பொல்லாத ஆவியினிடமிருந்து என்னைக் காத்தருளும் . நான் தினமும் சாத்தானையும் அவனுடைய சதித்திட்டங்களையும் எதிர்கொள்ளும்போது எனக்கு ஒரு அவசர உணர்வைக் கொடுங்கள், ஆனால் இயேசுவானவர் ஏற்கனவே என் எதிரியாகிய பிசாசானவனை ஜெயித்துவிட்டார் என்ற நம்பிக்கையையும் எனக்குக் தாரும் . இந்த எதிரியை எதிர்த்து நிற்கவும், நான் உமக்கு உண்மையுள்ளவனாக இருக்கவும் எனக்கு உதவுங்கள். என் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து