இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் நம் நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார் (2 கொரிந்தியர் 5:21; 1 பேதுரு 1:18-19). அந்த "சபையில் கேட்கும் " வார்த்தைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம் . நீதி என்பது பாவத்திலிருந்தும் குற்றத்திலிருந்தும் விடுப்பட்டு தேவனுக்கு முன்பாக நிற்கும்படியான தகுதியாகும். பரிசுத்தம் என்பது பரிசுத்த தேவனின் மகிமையையும் பரிசுத்தத்தையும் பிரதிபலிக்கும் தன்மை மற்றும் குணாதிசயமாகும் . மீட்பு என்பது ஆண்டவராகிய இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற மாபெரும் விலையைக் கொடுத்ததின் மூலமாய் வாங்கப்பட்ட சுதந்திரத்தின் ஈவாகும் . "கிறிஸ்தவர்கள் பூரணர் அல்ல!" என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்! ஆம், நாம் குறைபாடுள்ளவர்கள், ஆனால் இயேசுவின் அன்பான தியாகத்தின் காரணமாக, தேவனின் பார்வையில், நாம் ".. பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்" (கொலோசெயர் 1:22). இயேசுவின் அன்பான நண்பரே, இதைத்தான் நாம் அற்புதமான கிருபை என்கிறோம். எனவே, நமது மேன்மைகள் நாம் சுயமாக சம்பாதித்த நீதியில் இல்லை - நாம் தேவனுக்காக வாழ்வதால் நாம் மற்றவர்களை விட மேன்மையானவர்கள் அல்ல - ஆனால் நமது நீதியானது தேவன் மற்றும் அவருடைய கிருபையின் காரணமாகும்!

என்னுடைய ஜெபம்

சர்வஞானமும், இரக்கமுமுள்ள பிதாவே , இயேசுவின் பரிசுக்காக நான் உமக்கு எப்படி நன்றி சொல்ல முடியும்? என் பாவங்களுக்காக அவரை ஜீவபலியாக அனுப்பும் திட்டத்தை வகுத்து, மாம்ச சரீரத்திலே அனுப்பினீர் ,உம் சொந்த மக்கள் அவரைக் கொலை செய்தபோது நீர் துன்பத்தையும் வேதனையை சகித்து , எங்கள் மீது நீர் பாராட்டின அன்பு என் மனதிற்கு மிகவும் ஆச்சர்யமானது . ஆனால் என் உள்ளான மனதிலே , நீர் என் இருதயத்தை மீட்டெடுக்கும் அன்பான கிருபை மற்றும் இரக்கமுள்ள சித்தத்தின்படியாய் இவற்றை நடப்பித்தீர் என்று என்னால் அறிந்துக்கொள்ள முடியவில்லை . இயேசுவின் நாமத்தினாலே என்றென்றும் உமக்கு நன்றி செலுத்தி, துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து